Photo Credit: Wikipedia/ Riikka Puurunen
பின்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானி டூமோ சன்டோலாவுக்கு டெக் நோபல் பரிசு வழங்கப்பட்டு உள்ளது.
டெக்னாலஜி உலகில் மில்லினியம் டெக்னாலஜி பரிசு தான், நோபல் பரிசுக்கு சமமாக பாவிக்கப்படுகிறது. ALO என்ற பொரு கண்டுபிடித்த காரணத்திற்காக சன்டோலாவுக்கு இந்தப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து பரிசை வழங்கியுள்ள டெக்னாலஜி ஆகாடமி பின்லாந்து அமைப்பு, `சன்டோலா கண்டுபிடித்த அடாமிக் லேயர் டிபொசிஷன் (ALO) உலகம் முழுவதும் நுண்ணறிவியல் தொழில்நுடபத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மிக மெல்லியதான சில பொருட்களை அவர் கண்டுபிடித்துள்ள தொழில்நுட்பத்தை வைத்து மட்டுமே செய்ய முடியும்' என்று கூறியுள்ளது.
சன்டோலாவின் இந்த கண்டுபிடிப்பை வைத்து கணினி, ஸ்மார்ட் போன் போன்றவற்றுக்கு மிக மெல்லியதான பொருட்களை செய்ய முடியும்.
இது குறித்து சன்டோலா, `1974 ஆம் ஆண்டே இந்தப் பொருளை உருவாக்கும் முயற்சியில் நான் இறங்கினேன். ஆனால், 1990-களில் தான் முதன் முறையாக இந்த தொழில்நுட்பத்தை ஏரெடுத்துப் பார்த்தார்கள். செமி- கண்டக்டர் தயாரிக்கும் நிறுவனங்கள், நான் கண்டுபிடித்த இந்தப் பொருளை பயன்படுத்தத் தொடங்கின. ALO மூலம் ஒரு மின்னணு பொருளின் உட் தரத்தை பல மடங்கு உயர்த்த முடியும். இன்னும் சொல்லப் போனால், ALO தொழில்நுட்பத்தால் தான் தற்போது ஸ்மார்ட் போன்களும், லேப்டாப்புகளும் இவ்வளவு முன்னேற்றம் கண்டுள்ளன' என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
சன்டோலா குடும்பத்தில் மின்னணு சார்ந்த துறையில் யாரும் இருக்கவில்லை. இருப்பினும் அவருக்கு இயற்பியல் மீது சின்ன வயதில் இருந்தே மிகுந்த ஆர்வம் இருந்து வந்துள்ளது. அவர் ஹெல்சின்கி பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரான் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். தற்போது, பணி ஓய்வு பெற்றுவிட்ட சன்டோலா, `இப்பொது ஐன்ஸ்டீனின் தியரி ஆஃப் ரிலேட்டிவிட்டி குறித்து சிந்தித்து வருகிறேன். இந்தப் பரிசை வென்றதன் மூலம் நிறைய பணம் கிடைத்திருக்கிறது என்பது உண்மை தான். ஆனால், அதை விட முக்கியம், இதன் மூலம் பல இளைஞர்கள் ஊக்கம் பெறுவர். அவர்களுக்கும் புதிதாக ஏதாவதொன்றை கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்' என்று அடுத்த தலைமுறை குறித்து பேசுகிறார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்