பூமியின்மீது ஒரு விண்கல் மோதலாம், எச்சரிக்கும் நாசா!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 16 ஆகஸ்ட் 2019 20:26 IST
ஹைலைட்ஸ்
  • பூமியை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கடக்கலாம்
  • 1998 OR2 என பெயரிடப்பட்ட இந்த விண்கல்லை நாசா தற்போது கண்காணித்து வருகிறது
  • 1998 OR2 விண்கல் 13,500 அடி விட்டம் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது

1998 OR2 விண்கல் 13,500 அடி விட்டம் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது

Photo Credit: JPL / NASA

விண்கற்கள் - விண்வெளியில் மிதக்கும் பாறைகள். அவற்றில் ஒன்று பூமியைத் தாக்கி டைனோசர்களைத் துடைத்ததை நினைவில் உள்ளதா? அதுபோன்ற மற்றொரு பெரிய விண்கல் பூமியின்மீது மோதும் அபாயத்தில் உள்ளது, மேலும் அதன் சுற்றளவு காரணமாக பெரும் அழிவு ஏற்படலாம். 1998 OR2 என பெயரிடப்பட்ட இந்த விண்கல்லை நாசா தற்போது கண்காணித்து வருகிறது. இந்த விண்கல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பூமியின்மீது பாதிப்பை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, தற்போது இந்த விண்கல் பாதிப்பிலிருந்து தப்பிக்க ஒரு வழி உள்ளது, அதாவது சில முரண்பாடான காரணிகள் செயல்படாவிட்டால் அது பூமியை கடந்து சென்றுவிடும்.

1998 OR2 விண்கல் 13,500 அடி விட்டம் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் 29, 2020 அன்று அதிகாலை 5:56 மணிக்கு EDT (3:26 பிற்பகல் IST) பூமியைக் கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் நாசாவின் அருகிலுள்ள பூமி பொருள் ஆய்வுகளுக்கான மையம் (CNEOS) தெரிவித்துள்ளது. பூமிக்கு மிக நெருக்கமாக, இந்த விண்கல் சுமார் 0.04205 வானியல் அலகுகள் அல்லது பூமியின் மையத்திலிருந்து 3.9 மில்லியன் மைல் தொலைவில் இருக்கும். பாதுகாப்பானதாகத் தெரிகிறது, இல்லையா? ஓரிரு நிகழ்வுகள் காரணமாக விண்கல்லின் போக்கை மாற்ற முடியும், அது இறுதியில் பூமியில் மோத வாய்ப்பாக அமையலாம்.

முதலாவது யர்கோவ்ஸ்கி விளைவு (Yarkovsky effect), வெளிப்புற அல்லது உட்புறமாக உருவாக்கப்படும் கதிர்வீச்சின் காரணமாக உடலின் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக ஒரு வான உடலில் செலுத்தப்படும் விளைவு சக்தியாக வரையறுக்கப்படுகிறது. இது விண்கல்களின் அச்சை பாதிக்கும் என்று அறியப்படுகிறது. இது 1998 OR2 விண்கல்லின் சுழற்சியையும் பாதிக்கக்கூடும், இறுதியில் அதன் சுற்றுப்பாதையும் பூமியை நோக்கி திரும்பலாம். இந்த விண்கல் எவ்வளவு ஆபத்தானது என்பதைப் பற்றிய ஒரு கருத்தைத் தருவதற்கு, இந்த விண்கல் அறியப்படும் பிரகாசமான மற்றும் மிகப்பெரிய அபாயகரமான விண்கற்களில் ஒன்று.

இந்த பாதை மாற்றத்திற்கு வழிவகுக்கும் இரண்டாவது காரணி பேரழிவு விண்கல் மோதல் நிகழ்வு (catastrophic asteroid collision event). இது ஈர்ப்பு விசையால் ஏற்படும் பாதை இடையூறு ஆகும். இது ஒரு கிரகத்தைச் சுற்றியுள்ள விண்வெளியில் ஒரு சிறிய பகுதி என்று விவரிக்க முடியும், அங்கு கிரகத்தின் ஈர்ப்பு ஒரு விண்கல் போன்ற கடந்து செல்லும்போது இடஞ்சார்ந்த உடலின் சுற்றுப்பாதையை மாற்றி அதை உள்நோக்கி இழுத்து மோதலுக்கு வழிவகுக்கிறது. 1998 OR2-வால் ஏற்படும் டெக்டோனிக் சேதத்தைத் தவிர, இதன் தாக்கம் கிரகத்தின் வானிலை மற்றும் வளிமண்டல நிலைமைகளையும் கடுமையாக மாற்றிவிடும்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Asteroid, 1998 OR2, NASA
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. சோனி எக்ஸ்பீரியா 1 VIII: ஹெட்போன் ஜாக் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி இருக்கலாம் என FCC தகவல்
  2. ஒப்போ ஃபைண்ட் X9 அல்ட்ரா முன்பதிவுத் தொடக்கம்; அதன் சேமிப்பு மற்றும் நிறங்கள் குறித்த விவரங்கள் வெளியானது
  3. இந்தியாவில் மோட்டோ பேட் 60 ப்ரோ மற்றும் மோட்டோ பேட் 60 நியோ மாடல்களின் விலை உயர்வு: டிப்ஸ்டர் தகவல்
  4. மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ இந்திய அறிமுகத் தேதி அறிவிப்பு; நிறங்கள், முக்கிய அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டன
  5. 9,020mAh பேட்டரி, 50 மெகாபிக்சல் பின்புற கேமராவுடன் Vivo T5 Pro 5G இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  6. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா, கேலக்ஸி S25 FE மற்றும் கேலக்ஸி S25 மாடல்களின் விலை குறைப்பு
  7. டைமென்சிட்டி 6360 மேக்ஸ் சிப், 7,000mAh பேட்டரியுடன் Oppo F33 5G இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  8. ஒப்போ F33 ப்ரோ 5G இந்தியாவில் 7,000mAhபேட்டரி, 50-மெகாபிக்சல் மெயின் கேமராவுடன் அறிமுகம்: விலை,சிறப்பம்சங்கள்
  9. கூகுள் குரோமில் ஒரே கிளிக்கில் AI பணிகளைச் செய்ய உதவும் AI-ஆற்றல் கொண்ட 'Skills' அம்சம் அறிமுகம்
  10. கூகுள் ஆப்ஸ் இணைப்பு மற்றும் மேம்பட்ட AI பதில்களுடன் இந்தியாவில் அறிமுகமானது ஜெமினி பெர்சனல் இன்டெலிஜென்ஸ்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.