ஏறக்குறைய 15 ஆண்டுகள் கழித்து பூமிக்கு மிக அருகில் இன்று இரவு செவ்வாய் கிரகம் இருக்கும். பூமிக்கு ஒரு பக்கத்தில் சூரியனும், மறு பக்கத்தில் செவ்வாய் கிரகமும் இருக்கும். இந்த மூன்றும் நேர் கோட்டில் இன்று நிலை கொள்ளும். இதைவிட்டால் வரும், 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தான், செவ்வாய் கிரகம் மீண்டும் உலகுக்கு அருகில் வரும். இதைப் போன்ற ஒரு சம்பவம் 15 முதல் 17 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நடக்கும். கடந்த 27 ஆம் தேதி சந்திர கிரகணத்தைப் பார்த்தவர்கள், செவ்வாய் கிரகத்தையும் பார்த்திருக்க முடியும். அப்போது, செவ்வாய், நிலாவுக்குக் கீழேதான் இருந்தது.
வரும் செப்டம்பர் மாதம் வரை செவ்வாய் கிரகத்தை நாம் பார்க்க முடியும். ஆனால், இன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் அது உலகை விட்டு விலகிக் கொண்டே போகும். அதனால் தினமும் முன்பைப் பார்த்ததை விட சிறியதாகிக் கொண்டே போகும்.
இந்த அதிசயத்தை எங்கிருந்து கச்சிதமாக பார்க்கலாம்?
செவ்வாய் கிரகம் பூமிக்கு அருகில் வருவதை தெற்கு அரைக்கோளத்திலிருந்து பார்ப்பது தான் சிறந்தது. இதைவைத்துப் பார்த்தால், இந்தியா அதற்கு ஏற்ற இடம் இல்லைதான். ஆனால், செவ்வாய் கிரகத்தை இந்தியாவின் எந்த இடத்திலிருந்து வேண்டுமானால் பார்க்க முடியும். ஆனால், தென்னாப்பிரிக்காவிலிருந்தோ, ஆஸ்திரேலியாவிலிருந்தோ பார்ப்பது போல நம்மால் பார்க்க முடியாது. செவ்வாய் கிரகத்தைப் பார்ப்பதற்கு தொலைநோக்கி கருவி அவசியம். அப்படி இருந்தும் மேக மூட்டத்தால் பார்க்க முடியாமல் கூட போகலாம்.
அதே நேரத்தில் இந்த அதிசய நிகழ்வை நாசா, தனது யூ-டியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பியுள்ளது. செவ்வாய் கிரகத்தைப் பார்க்க கீழே இருக்கும் வீடியோவை சொடக்குங்கள். காலை சூரியன் உதிக்கும் வரை செவ்வாய் கிரகத்தைப் பார்க்க முடியும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்