Photo Credit: Xiaomi
சியோமி நிறுவனம் தனது ஸ்மார்ட் டிவி இராஜியத்தை 75 இஞ்ச் எம்.ஐ. 4S டிவியுடன் விரிவாக்கியுள்ளது. இந்த புதியவகை ஸ்மார்ட் டிவியை வரும் நவம்பர் 23 முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது.
கவர்ச்சிகரமான 4k ஸ்கிரின், மென்மையான வடிவமைப்பு, ஹெச்.டி.ஆர். வசதி என பல வசதிகளுடன் விற்பனைக்கு தயாராகும் இந்த ஸ்மார்ட் டிவி, அரோஸ்பேஸ் அலுமினியம் என்னும் கனிமத்தால் செய்யப்பட்டது.
சியோமி நிறுவனத்தின் பிரத்தியோக செயலிகளும், வாய்ஸ் சர்ச்சுடன் டிவியை பயன்படுத்தும் முறையையும் இதில் புதிதாக சேர்க்கப்பட்டள்ளது. மேலும், பூளூ டூத் மற்றும் வைஃபை போன்ற அடிப்படை அம்சங்களையும் கொண்டுள்ளது.
இதற்கு முன்னர் வெளியான 43-இஞ்ச் மற்றும் 55-இஞ்ச் அளவு டிவிகள் மார்கெட்டில் முன்னிலையில் இருக்கும் நிலையில். அவ்வரிசையில் புதிதாக நுழைந்தாலும் மார்கெட்டில் பெரிய அளவு எதிர்பார்ப்பை எம்.ஐ. 4S டிவி உண்டாக்கியுள்ளது.
இந்திய சந்தைகளில் 82,100 ரூபாய்க்கு சியோமி மால் மற்றும் எம்.ஐ.ஸ்டோர்ஸ் மூலம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மே மாத்தில் வெளியான 43 இஞ்ச் எம்.ஐ. 4s ஸ்மார்ட் டிவி குவாட்-கோர் பிராசஸர், வளைந்த ஸ்கிரின் மற்றும் 8 ஜிபி நினைவகத்துடன் சுமார் 19,100 ரூபாய்க்கு வெளியானது. அதற்கு முன் வெளியான 55 இஞ்ச் ஸ்மார்ட் டிவி சுமார் ரூ.35,100 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்