கடந்த வாரம், தனது ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் பல தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்திருந்தது. அதன்படி, சியோமி நிறுவனம் இந்தியாவில் 'Mi டிரக் பில்டர்' என ஒரு புதிய பொம்மையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பொம்மையை 1,199 ரூபாய் என்ற விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய பொம்மை இந்தியாவில் விரைவில் விற்பனையாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த பொம்மை குழந்தைகளின் மூளை செயல்பாட்டை அதிகரிக்கும் வண்ணம் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
குழந்தைகளுக்கு கற்றலை எளிதாக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது இந்த 'Mi டிரக் பில்டர்' பொம்மை. மொத்தம் 530 ப்ளாக்களை கொண்ட இந்த 'Mi டிரக் பில்டர்' 2-இன்-1 மாடலாக குழந்தைகள் விளையாடும் வகையில் அறிமுகமாகவுள்ளது. இந்த 2-இன்-1 'Mi டிரக் பில்டர்' பொம்மையில் உள்ள ப்ளாக்களை ஒருங்கினைத்து, குழந்தைகள் ட்ரக்கையும் உருவாக்கலாம், அதேநேரம் புல்டோசரையும் உருவாக்கிக் கொள்ளலாம்.
மேலும், இந்த பொம்மைக்கென ஒரு பக்கத்தை உருவாக்கி அதற்கான மக்கள் ஆதரவையும் வேண்டியுள்ளது. 1500 என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை 2277 பேர் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், இந்த போம்மையின் ஏற்றுமதி ஜூலை 25-ல் துவங்கும் எனவும் அந்த பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, சியோமியின் ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், பல புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக பிரத்யேகமாக ஒரு பக்கத்தை உருவாக்கியுள்ள சியோமி நிறுவனம், அந்த பக்கத்தில் Mi டிரிம்மர், Mi LED பல்ப், வயர்லெஸ் ஹெட்போன்கள், பாஸ்ட் சார்ஜர்கள் என பல தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்