லைவ் ஆனது Mi LED ஸ்மார்ட் பல்ப்- விலை விவரம் வெளியானது!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 26 ஏப்ரல் 2019 16:05 IST
ஹைலைட்ஸ்
  • இன்று மதியம் 12 மணியிலிருந்து இந்த பல்பிற்கான க்ரவுட் ஃபண்டிங் ஆரம்பமானது
  • அமேசான் அலெக்ஸா மூலம் இந்த பல்பை கட்டப்படுத்த முடியும்
  • அதேபோல கூகுள் அசிஸ்டென்ட் மூலமும் பல்பை கட்டப்படுத்தலாம்

16 மில்லியன் வண்ணங்களை பிரதிபலிக்கக் கூடியது இந்த பல்ப்

எம்ஐ எல்ஈடி ஸ்மார்ட் பல்ப் இந்தியாவில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் எம்ஐ.காம் தளத்தில் பல்ப் crowdfunding-கிற்காக லைவ் ஆகியுள்ளது. இந்த ஸ்மார்ட் பல்ப் அமேசானின் குரல் உதவி அலெக்ஸாவுடனும் கூகுள் அசிஸ்டெண்டனுடனும் இணைந்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மற்ற சிறப்பம்சங்கள் என்னவென்றால் இந்த  எம்ஐ எல்ஈடி ஸ்மார்ட் பல்ப், 16,000 மில்லியன் வண்ணங்களை பிரதிபலிக்ககூடியது. 11 வருட ஆயுட் காலம் கொண்டது. இந்த ஸ்மார்ட் பல்பினை எம்ஐ ஸ்மார்ட் ஹோம் ஆப் மூலமாக கட்டுபடுத்த முடியும். எம்ஐ எல்ஈடி ஸ்மார்ட் பல்ப்பின் விற்பனை crowdfunding வழியாகவோ அல்லது Mi.com வழியாகவோ கிடைக்கும் என்று வெளியீட்டு நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.

எம்ஐ எல்ஈடி ஸ்மார்ட் பல்ப் விலை:

இந்தியாவில் எம்ஐ எல்ஈடி ஸ்மார்ட் பல்ப்பின் விலை இன்று அறிவிக்கப்பட்டது. பல்பின் முதல் 4000 யூனிட்டுகள் 999 ரூபாய்க்குக் கிடைக்கும். அதன் பிறகு பல்பின் விலை 1,299 ரூபாயாக உயரும். தற்போது பதிவு செய்யப்படும் பல்புகள், மே 20 ஆம் தேதி முதல் ஏற்றுமதி செய்யப்படும். 

எம்ஐ எல்ஈடி ஸ்மார்ட் பல்ப் சிறப்பம்சங்கள்:

11 வருட ஆயுட் காலம் கொண்டது

16 மில்லியன் வண்ணங்களை பிரதிபலிக்கக் கூடியது.

வண்ணங்களை எளிதில் மாற்றலாம்.
 

அமேசானின் அலெக்ஸா மற்றும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டெண்ட் மூலமாகவும் எம்ஐ ஹோம் ஆப் மூலமாகவும் இந்த பல்பினை கட்டுப்படுத்த முடியும்.

Advertisement

வயர்லெஸ் மூலமாக இந்த பல்பினை ஆன் செய்யவும் ஆஃப் பண்ணவும் முடியும். அமைப்பு முறைகள் மற்றும் வண்ணங்களையும் மாற்றிக் கொள்ள முடியும். 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்10 தொடர் விவரங்கள் கசிந்தன; புரோ மேக்ஸ் மாடலில் டைமன்சிட்டி 9600 புரோ சிப்செட் இடம்பெறலாம்!
  2. டெக்னோ கேமன் 50 அல்ட்ரா 5G டைமன்சிட்டி 7400 அல்டிமேட் SoC உடன் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  3. 150W சவுண்ட் மற்றும் 4 EQ மோட்களுடன் போர்ட்ரானிக்ஸ் பியூர் சவுண்ட் புரோ X2 ஹோம் தியேட்டர் இந்தியாவில் அறிமுகம்
  4. ஷியோமி பவர் பேங்க் 5i 20000mAh இந்திய அறிமுக தேதி உறுதி; முக்கிய அம்சங்கள், விவரங்கள் வெளியீடு!
  5. 9-ஸ்பீக்கர் JBL ஆடியோ சிஸ்டத்துடன் மோட்டோ பேட் 70 குரூவ் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!
  6. சாம்சங் 'பேக் டூ ஸ்கூல்' விற்பனை: கேலக்ஸி S26, டேப் S11 அல்ட்ரா உள்ளிட்ட சாதனங்களுக்கு தள்ளுபடி!
  7. கூகுளின் ஃபிட்பிட் ஏர் (Fitbit Air) அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக அமேசான் இந்தியாவில் கண்டறியப்பட்டது
  8. ரெட்மி நோட் 17 இந்திய அறிமுக தேதி கசிந்தது; முக்கிய அம்சங்களை டிப்ஸ்டர் உறுதிப்படுத்தியுள்ளார்!
  9. பெரிய பேட்டரியுடன் விரைவில் ஷியோமி பேட் 9 அறிமுகமாகலாம்; கசிந்த முக்கிய அம்சங்கள்!
  10. சாம்சங் கேலக்ஸி A55, A35 மாடல்களில் ஆண்ட்ராய்டு 17 சார்ந்த ஒன் UI 9 சோதனை பதிப்புகள் கண்டறியப்பட்டன!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.