கொரோனா வைரஸை கண்டறிய உதவுகிறது 'அமேசான் அலெக்சா'! எப்படினு தெரிஞ்சுக்கோங்க!!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 28 மார்ச் 2020 12:12 IST
ஹைலைட்ஸ்
  • அறிகுறிகள், பயண வரலாறு & தொற்று பற்றிய விவரங்களை அலெக்சாவிடம் கேட்கலாம்
  • அமேசான் ஒரு வலைப்பதிவில் இந்த வளர்ச்சியை அறிவித்தது
  • தொற்றுநோய்களுக்கு மத்தியில் அமேசான் உங்களுக்கு உதவுகிறது

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் பயனர்களுக்கு உதவக்கூடிய அம்சங்களை அமேசான் பட்டியலிட்டுள்ளது.

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய Amazon Alexa உங்களுக்கு உதவுகிறது. அமேசான், வைரஸ் தொற்று பற்றிய உண்மைகளை வெளியிடுவதற்கான செயல்பாட்டை அலெக்சாவுக்கு வழங்கியுள்ளது. அமேசான் அலெக்சா மூலம், காலிங், மியூசிக் போன்றவற்றை அனுபவித்திருப்போம். தற்போது, நோய் தொற்றின் அறிகுறிகள், நீங்கள் வெளியூர் சென்றுவந்திருந்தால் அவற்றின் பயண வரலாறு மற்றும் வைரஸ் தொற்று பற்றிய முழு தகவல்களையும் அலெக்சாவை பயன்படுத்தி கேட்டறியலாம். கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் மக்களுக்கு உதவும் வகையில் அமேசான் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது. 

இந்த அம்சம் இப்போது அமெரிக்க பயனர்களுக்கு கிடைக்கிறது. நீங்கள், அலெக்ஸாவிடம், coronavirus அல்லது COVID-19 இருந்தால் என்ன செய்வது? என்ற கேள்வியை கேட்பதன் மூலம் voice assistant உங்களுக்கு பதிலளிக்கும். அதன் பிறகு, அது CDC-யின் வழிகாட்டுதல்கள் குறித்த ஆலோசனைகளை உங்களுக்கு வழங்குகிறது.

ஜப்பானிலும், அலெக்சாவைப் பயன்படுத்தி, பாதிப்பு அளவைப் பற்றி கேட்டறியலாம். அதற்கு, அலெக்சா, பாதிப்பு நிலை மற்றும் அறிகுறிகளுடன் பொருந்தக்கூடிய வழிகாட்டுதல்களை வழங்கும். இந்த பதில்கள் அனைத்தும், ஜப்பானிய சுகாதாரம், தொழிலாளர் மற்றும் நலத்துறை அமைச்சகம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களின் பேரில் வழங்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், இந்தியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள அமேசான் அலெக்சா பயனர்கள் அலெக்சாவிடம் 20 விநாடிகள் ஒரு பாடலைப் பாடச் சொல்லலாம், அந்த நேரத்தில் அவர்கள் கைகளைக் கழுவுவிடுவார்கள். இதனால், இந்த அம்சம் குழந்தைகளை சரியாக கைகளை கழுவும் பழக்கத்தை ஊக்குவிக்கிறது. அமேசான் அலெக்சா போலவே, Apple's Siri voice assistant-ம் கொரோனா வைரஸ் தொற்றுக்கான ஆலோசனையை வழங்குகிறது. இதனைத் தொடர்ந்து, கூகுளும் கை கழுவும் நேரத்தையும் சேர்த்துள்ளதாக சிஎன்இடி தெரிவித்துள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Amazon, Amazon Alexa, Coronavirus, COVID 19
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.