4 கேமரா மற்றும் நாட்ச் டிஸ்பிளேயுடன் வெளியாகிறது ஜியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ..!

4 கேமரா மற்றும் நாட்ச் டிஸ்பிளேயுடன் வெளியாகிறது ஜியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ..!

ஜியோமி ரெட்மி நோட் 6 ப்ரோவின், இந்திய விலையானது ரூ.15,700 இருக்கும் என தெரிகிறது

ஹைலைட்ஸ்
  • ஜியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ தாய்லாந்தில் அறிமுகமாக உள்ளது
  • ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது
  • வரும் செப்.27ஆம் தேதி முதல் செப்.30ஆம் தேதி வரை கிடைக்கும்
விளம்பரம்

 

சீனாவின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஜியோமி தனது மிட் - ரேஞ் போனான ஜியோமி ரெட்மி நோட் 6 ப்ரோவை தாய்லாந்தில் அறிமுகப்படுத்த உள்ளது. ரெட்மி நோட் 5 ப்ரோ வெற்றியை தொடர்ந்து அதன் அப்கிரேடாக ரெட்மி நோட் 6 ப்ரோ அறிமுகமாக உள்ளது. டூயல் செல்பி கேமரா, 19:9 நாட்ச் டிஸ்பிளே, அப்கிரேட் செய்யப்பட்ட பின்பக்க கேமரா சென்சார்கள் உள்ளிட்ட அம்சங்களுடன் வெளிவருகிறது.

எனினும், ரெட்மி நோட் 6 ப்ரோவில் முந்தைய மாடலான நோட் 5 ப்ரோவில் பயன்படுத்தப்பட்ட அதே ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர் தான் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ரெட்மி நோட் 6 ப்ரோ குறித்து ஜியோமி நிறுவனம், சீன உட்பட எந்த முன்னனி சந்தையிலும் இதுவரை தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. ஆனால் தனது எம்ஐ ஃபோரத்தில் மட்டும் நோட் 6 ப்ரோ குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

ஜியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ விலை?

ஜியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ, 4ஜிபி ரேம்/ 64ஜிபி மெமரி வகை போனின் இந்திய விலையானது ரூ.15,700 (தாய்லாந்த் விலையின்படி) இருக்கும் என தெரிகிறது. மற்ற மாடல்களின் விலை குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ஜியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ போனை, பிளாக், புளு, ரோஸ் கோல்டு உள்ளிட்ட நிறங்களில் தாய்லாந்த் இ-காமர்ஸ் வெப்சைட்களில் வரும் செப்.27ஆம் தேதி முதல் செப்.30ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்.

ஜியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ சிறப்பம்சங்கள்

புதிதாக வெளிவர இருக்கும் ஜியோமி ரெட்மி நோட் 6 ப்ரோவில், 6.26 இன்ச் எச்டி + ஐபிஎஸ் எல்சிடியுடன் கூடிய 19:9 நாட்ச் டிஸ்பிளே ஸ்கிரின் பேனல், கார்னரிங் கொரில்லா க்ளாஸ் பாதுகாப்புடன் வருகிறது. மேலும், 14 என்எம் ஆக்டோ-கோர் குவல்காம் ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர் அட்ரினோ ஜிபியூடன் 4ஜிபி ரேம் 64ஜிபி மெமரியுடன் வருகிறது.

ஜியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ கேமராவை பெருத்தவரையில், பின்பக்கம் டூயல் கேமராவில் 12-மெகா பிக்செல் ப்ரைமரி சென்சார் கேமரா, 5 மெகா பிக்செல் சென்சாருடன் ஆட்டோ ஃபோகஸ் 1.4 மைக்ரான் பிக்செலஸ் கேமராவையும் கொண்டுள்ளது. முன்பக்கம் டூயல் கேமராவில் 20-மெகா பிக்செல் ப்ரைமரி சென்சார் கேமரா, ஏஐ பேஸ்லாக்குடன் 2-மெகா பிக்செல் சகண்ட்ரி கேமராவும் கொண்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரையில் முந்தைய மாடலில் இருந்தது போல் 4,000mah திறன்கொண்ட பேட்டரியே இதிலும் உள்ளது. இதை ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 2 நாட்கள் வரை நீடிக்கும் திறன்கொண்டுள்ளது.

 

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great battery life
  • Bright and vivid display
  • Decent cameras and performance
  • Sturdy body
  • Bad
  • MIUI has ads
  • Hybrid dual-SIM tray
  • No 4K video recording
  • Fast charger not bundled
Display 6.26-inch
Processor Qualcomm Snapdragon 636
Front Camera 20-megapixel + 2-megapixel
Rear Camera 12-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android
Resolution 1080x2280 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »