தனது துணை நிறுவனமான போக்கோவின் ( (#Poco ) முதல் திறன்பேசியான போக்கோ எஃப்1 (#PocoF1)ஐ இந்தியாவில் ஆகஸ்ட் 22 அன்று அறிமுகப்படுத்தவுள்ளது சியோமி நிறுவனம். Poco F1 ஃப்ளிப்கார்ட்டில் மட்டுமே பிரத்யேகமாக விற்பனைக்குக் கிடைக்கும். இதற்காக ஃப்ளிப்கார்ட் தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள டீசர் பக்கத்தில் ‘ஃப்ளிப்கார்ட்டில் மட்டுமே” என்று உள்ள வாசகம் இதை உறுதிப்படுத்துகிறது. விரைவில் வர இருக்கிறது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. எனினும் சியோமி சார்பில் அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இன்னும் சில நாளில் இப்போன் வெளியாகும் நாள், விலை என எல்லாவற்றையும் ஃப்ளிப்கார்ட் அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.
“அண்மைக்காலமாக ஸ்மார்ட்போன்களில் புதுமைகள் குறைந்து விலை மட்டும் ஏறிக்கொண்டே வருகிறது. இப்போக்கை உடைத்து குறைந்த விலையில் அனைத்து வகையிலும் வேகம், வேகம் என்ற குறிக்கோளுடன் போக்கோ திறன்பேசிகள் வர உள்ளன” என்று அதன் தயாரிப்பு மேலாளர் ஜெய் மணி தெரிவித்தார். போக்கோபோனின் அன்பாக்சிங் வீடியோ யூடியூபில் வெளியாகி அதன் டிஸ்பிளேவும் இரட்டை பின்புற கேமராவும் கவனத்தை ஈர்த்தன.
திறன் குறிப்பீடுகளைப் பொருத்தவரையில், சியோமி போக்கோ எஃப்1 64 ஜிபி, 128 ஜிபி என்று இரு மெமரி ஆப்சன்களுடன் கிடைக்கும். 64ஜிபி மாடலின் விலை 33,300 ஆகவும், 128 ஜிபி மாடலின் விலை 36,400 ஆகவும் இருக்கும். இவை தோராய விலைகளே. இந்தியாவில் இப்போனின் விலை பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மற்ற விவரங்களும் வெளியாகவில்லை என்றாலும் பெலாரஸ் ஆன்லைன் ஸ்டோர் ஒன்றின் தகவல்படி 6.18” ஃபுல் எச்டி டிஸ்பிளே, 18:7:9 அகல உயரத் தகவு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 SoC ஆகியவற்றுடன் இப்போன் இருக்கும் எனத் தெரிகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்