தமிழ்நாட்டில் உருவாகும் புதிய தயாரிப்பு தொழிற்சாலை... சியோமியின் அதிரடி!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 20 மார்ச் 2019 12:08 IST
ஹைலைட்ஸ்
  • இந்தியாவில் சியோமியின் புதிய தயாரிப்பு தொழிற்சாலை துவக்கம்!
  • ஃபாக்ஸ்கான் மற்றும் ஹைபேட் நிறுவனங்களுடன் சியோமி கூட்டனி!
  • ஒரு வினாடிக்கு 3 ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் சியோமி!

Photo Credit: சியோமி

சியோமி கடந்த செவ்வாயன்று தனது புதிய தயாரிப்புகளான ரெட்மி கோ ஸ்மார்ட்போன் மற்றும் எம்ஐபே ஆன்லைன் பண சேவை ஆப் பேன்றவற்றை டெல்லியில் அறிமுகம் செய்தது. 

அதை தொடர்ந்து இந்தியாவில் மேலும் ஒரு தயாரிப்பு தொழிற்சாலையை துவங்கபோவதாக சியோமி நிறுவனம் அறிவித்தது. 

இதன் மூலம் இந்தியாவில் ஏழாவது தொழிற்சாலையை துவங்கும் சியோமி இந்த புதிய தொழிற்சாலையை தமிழ்நாட்டில் துவங்க திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த புதிய தயாரிப்பு நிறுவனத்தை ஃபிளக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சியோமி துவங்க உள்ளது.

'இந்த புதிய ஸ்மார்ட்போன் தயாராக்கும் தொழிற்சாலையை இந்தியாவில் ஃபிளக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்குவதில் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேக் இன் இந்தியா திட்டத்துடன் இணைந்து பணியாற்றுவதால் இங்குள்ள மக்களின் விருப்பமுள்ள டிசைனுடன் எங்களது கற்பனையும் கலந்து கொடுக்க முடிகிறது.' என சியோமி இந்தியா நிறுவனத்தின் சார்பாக முரளி கிருஷ்ணன்.பி தெரிவித்தார்.

இந்தியாவில் ஏற்கனவே ஃபாக்ஸ்கான், ஃபிளக்ஸ் மற்றும் ஹைபேட் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு இடங்களில் ஸ்மார்ட்போன் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றனர். மேலும் புதிதாக உருவாக்கப்பட்ட இந்த புதிய தொழிற்சாலையின் மூலம் இனி சியோமி நிறுவனத்தால் ஒரு வினாடிக்கு 3 ஸ்மார்ட்போன்களை உருவாக்க முடியும்.

நேற்று டெல்லியில் ரெட்மி கோ போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த புதிய தொழிற்சாலை பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது. மிகவும் விமர்சையாக நடந்த இந்த விழாவில் ரெட்மி கோ போனுடன் எம்ஐ பே என்னும் ஆன்லைன் பணபரிவர்த்தனை செய்யும் ஆப் அறிமுகம் செய்யப்பட்டது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Xiaomi, Flex, Make in India, Tamil Nadu

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 SoC, 7,200mAh பேட்டரியுடன் விவோ X300 E அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள்
  2. விவோ T5e இந்தியாவில் 5,500mAh பேட்டரி, 8-மெகாபிக்சல் பின்புற கேமராவுடன் அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள்
  3. போக்கோ M8 பவர் இந்திய அறிமுக தேதி வெளியீடு: 3 நாட்கள் வரை பேட்டரி ஆயுள்!
  4. சியோமி 17T, ரெட்மி நோட் 15 & 15 சீரிஸ் போன்களின் விலை இந்தியாவில் உயர்வு: திருத்தப்பட்ட விலைகளைப் பார்க்கவும்
  5. விவோ S2 மொபைலின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியானது: இந்தியாவில் விரைவில் அறிமுகம் உறுதியானது!
  6. ரெட்மி நோட் 17 இந்திய அறிமுகம் குறித்த அறிவிப்பு; இந்தியாவில் இதன் விலை இணையத்தில் கசிந்தது
  7. [பிரத்தியேகச் செய்தி]புதிய மீடியாடெக் சிப்செட், 3D வளைந்த திரையுடன் iQOOZ11 விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது
  8. Vi ரூ.200 ப்ரீபெய்ட் பிளான்: 20 OTT தளங்கள், லைவ் TV, வரம்பற்ற 5G டேட்டா மற்றும் பல சலுகைகள் அறிமுகம் !
  9. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல்: தொடக்க தேதி, HDFC வங்கி தள்ளுபடி மற்றும் சலுகைகள்!
  10. ஃபிளிப்கார்ட் சுதந்திர தின விற்பனை ஆகஸ்ட் 8 அன்று தொடங்குகிறது: வங்கிச் சலுகைகள் மற்றும் டீல்கள் அறிவிப்பு
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.