சியோமி நிறுவனம் தனது ரெட்மி Y3 போனை அடுத்த வாரம் 24 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. அதே நாளில் சியோமி நிறுவனம் இன்னொரு ஸ்மார்ட் போனையும் வெளியிட்டு அதிர்ச்சி கொடுக்கலாம். அந்த போன் ரெட்மி 7 ஆக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. சியோமி நிறுவனத்தின் துணைத் தலைவர் மனு குமார் ஜெயின் சமீபத்தில் ட்விட்டரில் பகிர்ந்த ஒரு படத்தில் இது குறித்து துப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதை வழிமொழியும் வகையில், பிரபல போன் வல்லுநர் இஷான் அகர்வாலும், ‘விரைவில் ரெட்மி 7 இந்திய சந்தைக்கு வரும்' என்று கூறியுள்ளார். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, சியோமி நிறுவனம் ரெட்மி 7 போனை அடுத்த வாரம் வெளியிட வாயுப்புள்ளதாக தெரிகிறது.
ரெட்மி 7 போன், சீனாவில் ஏற்கெனவே வெளியாகியுள்ளது. அங்கு நல்ல வரவேற்பை அந்த போன் பெற்றுள்ளது. இந்தியா, சியோமியின் மிகப் பெரிய மார்க்கெட் என்பதால் இங்கும் ரெட்மி 7 சீக்கிரம் வெளியாகும் என்பதை யூகிக்க முடிகிறது.
போன் வல்லுநர் அகர்வால், ‘ரெட்மி 7 இந்தியாவில் சீக்கிரம் வெளியிடப்படும். அதேபோல ரெட்மி 7A மற்றும் ரெட்மி Y3 ஆகிய போன்களும் இந்திய சந்தைக்கு விரைவில் வரலாம்' என்றுள்ளார். முன்னதாக சியோமி நிறுவனம், ரெட்மி நோட் 7 ப்ரோ போனை வெளியட்ட அதே நாளன்று ஆச்சரியப்படும் வகையில் ரெட்மி நோட் 7 போனையும் வெளியிட்டது. இதேபோல இந்த முறையும் நடக்கலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
ரெட்மி 7 சிறப்பம்சங்கள்:
ரெட்மி 7-ல் 6.36 இன்ச் எச்.டி+ திரையும் அதைப் பாதுகாக்க கொரில்லா க்ளாஸ் 5 அமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 632 எஸ்.ஓ.சி-யால் பவரூட்டப்பட்டுள்ள ரெட்மி 7, 4 ஜிபி ரேம் திறனை கொண்டுள்ளது. 12 மெகா பிக்சல் முதன்மை கேமரா மற்றும் அதனுடன் 2 மெகா பிக்சல் டெப்த் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. செல்ஃபிகளுக்காக 8 மெகா பிக்சல் கேமரா வடிவமைக்கப்பட்டுள்ளது. 4,000 எம்.ஏ.எச் பேட்டரி மூலம் ரெட்மி 7 பவரூட்டப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்