Xiaomi Mi Super Sale: தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன்கள்!

Xiaomi Mi Super Sale: தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன்கள்!

Xiaomi-யின் தற்போதைய Mi Super Sale-ல் சில சுவாரஸ்யமான சலுகைகள் உள்ளன

ஹைலைட்ஸ்
  • Redmi K20 Pro ரூ. 25,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது
  • Poco F1 ரூ. 14,999-க்கு தள்ளுபடி விலையில் கிடைக்கிறது
  • Redmi Note 7 Pro-வின் விலை ரூ. 10,999-யாக உள்ளது
விளம்பரம்

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஜியோமி தற்போது டிசம்பர் 6 முதல் டிசம்பர் 12 வரை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் Mi Super Sale இயக்கி வருகிறது. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், விற்பனையில் பங்கேற்கும் பொருட்கள் மற்ற இ-காமர்ஸ் வலைத்தளங்களிலும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. ஜியோமி தற்போது Redmi K20 Pro, Redmi K20, Poco F1, Redmi Note 7A, Redmi 7, Redmi 8A மற்றும் இன்னும் சில ஸ்மார்ட்போன்களை தள்ளுபடி விலையில் விற்பனை செய்கிறது. அதுமட்டும் இல்லை - ICICI வங்கி கிரெடிட் கார்டுதாரர்களுக்கு, கிரெடிட் கார்டு EMI-களில் 5 சதவீத உடனடி தள்ளுபடி கிடைக்கும். நீங்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய சில சலுகைகள் இங்கே:


Redmi K20 Pro, Redmi K20 சலுகைகள்:

Redmi K20 Pro, ஒரு பாப்-அப் கேமரா தொகுதியைக் கொண்ட AMOLED டிஸ்ப்ளேவை பேக் செய்கிறது. இது Snapdragon 855 SoC-யால் இயக்கப்படுகிறது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போனின் அடிப்படை வேரியண்ட் ரூ. 25.999-க்கு கிடைக்கிறது. உயர் வேரியண்ட் 8 ஜிபி ரேம் 256 ஜிபி பதிப்பிற்கு தள்ளுபடி செய்யப்பட்ட விலையான ரூ. 28,999-க்கு கிடைக்கிறது. இது ஸ்மார்ட்போன்களின் அசல் விலையை விட முறையே ரூ. 27,999 மற்றும் ரூ. 29,999-ல் இருந்து குறைவாகும்.

Redmi K20-யின் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட பேஸ் வேரியண்ட் ரூ. 19,999 முதல் ஆரம்பமாகிறது. அதன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட உயர் வேரியண்டிற்கு ரூ. 22.999-யாக விலையிடப்படுள்ளது. இந்த வேரியண்டுகளின் விலை முறையே ரூ. 21,999 மற்றும் ரூ. 23,999 ஆகும்.


Redmi 7A, Redmi 8A சலுகைகள்:

Redmi 7A மற்றும் Redmi 8A வழங்கும் ரெட்மியின் பட்ஜெட்டிலும் விலை குறைப்பு கிடைத்துள்ளது. Redmi 7A, 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட பேஸ் வேரியண்டின் விலை ரூ. 5,299 மற்றும் 2 ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 5,499-க்கு விற்பனை செய்கிறது.

Redmi 8A, 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட பேஸ் வேரியண்டின் விலை 6,499 ரூபாயும், 3 ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 6,999-யாகவும் உள்ளது.


Redmi Note 7 Pro சலுகைகள்:

Redmi Note 7 Pro அதன் சக்திவாய்ந்த Snapdragon 675 SoC-க்கு நன்றி. இப்போது இது ஒரு கவர்ச்சியான விலையில் கிடைக்கிறது. தற்போதைய விற்பனையில், அடிப்படை வேரியண்ட் 4 ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு ரூ. 10,999 ஆகும். 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மிட் வேரியண்டின் விலை ரூ. 12.999 ஆகும். 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட டாப் வேரியண்டின் விலை ரூ. 14.999 ஆகும்.


Redmi Note 7S சலுகைகள்:

Redmi Note 7S, 48-மெகாபிக்சல் முதன்மை கேமராவைக் கொண்டுள்ளது மற்றும் தற்போது நடைபெற்று வரும் விற்பனையில் சில நல்ல தள்ளுபடியைப் பெறுகிறது. 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை வேரியண்டின் விலை ரூ. 8,999 ஆகும். 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட உயர் வேரியண்டின் விலை ரூ. 9,999 ஆகும்.


Redmi Go சலுகைகள்:

Android Go இயங்குதளத்தின் கீழ் ஜியோமியின் முதல் ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையையும் பெறுகிறது. Redmi Go-வின் 1 ஜிபி ரேம் 8 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு ரூ. 4,299-யாக விலையிடப்படுள்ளது. 1 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட உயர் வேரியண்டின் விலை ரூ. 4,499 ஆகும்.


Poco F1 சலுகைகள்:

Poco F1 அதன் சக்திவாய்ந்த வன்பொருள் மற்றும் ஆக்கிரமிப்பு விலையால் அனைவரையும் திகைக்க வைத்தது. சரி, விலை இன்னும் கவர்ச்சியூட்டுகிறது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜுடன் அடிப்படை வேரியண்டிற்கு வெறும் ரூ. 14,999-க்கு ஜியோமி தற்போது விற்பனை செய்கிறது. 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட உயர் வேரியண்ட் ரூ. 18.999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Redmi Y3, Redmi 7 சலுகைகள்: 

Redmi Y3 மற்றும் Redmi 7 ஆகியவை ஒரே Snapdragon 632 SoC-ஐக் கொண்டுள்ளன. selfie-focused Redmi Y3-க்காக 32 மெகாபிக்சல் முன் கேமராவை ரெட்மி தேர்வு செய்துள்ளார். இந்த ஸ்மார்ட்போன் இப்போது 3 ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு ரூ. 7,999-க்கு கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட உயர் வேரியண்டின் விலை ரூ. 9,999 ஆகும்.

மறுபுறம், Redmi 7-ன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜுடன் அதன் அடிப்படை வேரியண்டிற்கு ரூ. 6,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மற்ற வேரியண்ட் ரூ. 7,999-க்கு கிடைக்கிறது.

Xiaomi Mi Super Sale-ன் போது பட்டியலிடப்பட்ட அனைத்து சலுகைகளையும் பார்க்க Mi.com-க்குச் செல்லவும். சில ஸ்மார்ட்போன்கள் முந்தைய Xiaomi Black Friday sale-ல் தோன்றிய அதே விலையில் இன்னும் கிடைக்கின்றன. எனவே உங்களுக்கு பிடித்த சாதனத்தை மீண்டும் வாங்குவதை நீங்கள் தவறவிட்டால், இப்போது ஒன்றைத் வாங்குவதற்கான நல்ல நேரம் இது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Xiaomi, Xiaomi MI Super Sale, Redmi K20 Pro Sale, Poco F1 Sale
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »