ஜியோமி எம்ஐ மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனானது சீனாவில் வரும் அக்.25ஆம் தேதி வெளியாவதாக அந்த நிறுவனத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஜியோமி எம்ஐ மிக்ஸ் 3 வெளிவர இன்னும் 4 நாட்களே இருக்கும் பட்சத்தில் வரவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன்களுக்கு இது பெரும் சவால் விட்டுள்ளது. சீனா தயாரிப்பு நிறுவனம் எம்ஐ 3யில் 24 மெகா பிக்ஸல் கொண்ட இரட்டை செல்பி கேமிரா இருக்கும் என்று அறிவித்துள்ளது. இந்த ப்ரீமியம் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் குறித்து ஏற்கனவே பலமுறை இதன் உற்பத்தியாளர் .
ஜியோமி எம்ஐ மிக்ஸ் 3, 10 ஜிபி ரேம் மற்றும் 5G இணைப்புடன் வருகிறது. ஜியோமி நிறுவன நிர்வாகி ஒருவர் ஜியோமி எம்ஐ மிக்ஸ் 3 குறித்து மேலும் சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில், 1080x2340 ஸ்கிரின் அளவு, 19.5:9 அக்ஸப்ட் ரேஷியோ மற்றும் 10ஜிபி ரேம் கொண்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவல்களை ஜியோமி நிறுவன தயாரிப்பு சந்தைப்படுத்துதல் குறித்து அவர்களது இணைய பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஜியோமி எம்ஐ மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் 10 ஜிபி ரேம் உள்ள தகவல்கள் ஏற்கனவே வெளிவந்தாலும், ஜியோமி நிறுவனத்தின் சர்வதேச செய்தித் தொடர்பாளர் டோனோவன் சங் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டதன் மூலம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது. இதே போல் சிறப்பம்சங்கள் கொண்ட போனை ஒப்போ அறிமுகப்படுத்துவதாக இருந்தது இருப்பனும் அது வெளியாவது குறித்து எந்த தகவலும் இல்லை, எனவே 10 ஜிபி ரேம் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமை ஜியோமியையே சேர்கிறது.
இதனிடையே ஜியோமி எம்ஐ மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனின் கைமுறை கேமரா உள்ளிட்ட சில விவரங்கள் கசிந்துள்ளன. அதில், இந்த போன் நாட்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது. விண்டோஸ் 10 கம்ப்யூட்டரை பேஸ்லாக் கொண்டு அன்லாக் செய்கிறது. மேலும், இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் கொண்டுள்ளதாக தெரிகிறது. எனினும் இந்த தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.
ஜியோமி எம்ஐ மிக்ஸ் 3 விலை குறித்த தகவல்கள் வதந்திகளாக பரவிவருகின்றன அதன்படி, 6ஜிபி ரேம், 64ஜிபி மெமரி வேரியண்டின் விலை $510 டாலராக, (தோராயமாக ரூ.37,500) இருக்கலாம். 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி வேரியண்டின் விலை $555 டாலராக, (ரூ.40,900) இருக்கலாம். 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி வேரியண்டின் விலை $600 டாலராக, (ரூ.44,200) இருக்கலாம். 8ஜிபி ரேம், 256ஜிபி மெமரி வேரியண்டின் விலை $645 டாலராக, (ரூ.47,500) இருக்கலாம். மேலும், டாப் ஏண்ட் மாடலான 10ஜிபி ரேம், வேரியண்டின் விலை குறித்து எந்த தகவலும் இதுவரை வரவில்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்