சியோமி நிறுவனம், திங்கட்கிழமையான இன்று வெளியிட்ட தகவலின் படி, அந்த நிறுவனம் எம் ஐ எக்ஸ்பிரஸ் கியோஸ்க்ஸ்-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. கியோஸ்க்ஸ் என்பது வேறொன்றுமில்லை, வெண்டிங் மெசின்கள்(Vending Machines). பெரிய ஷாப்பிங் மால்கள், சூப்பர் மார்கெட்கள் போன்ற இடங்களில் இந்த வென்டிங் மேசின்கள் வைக்கப்பட்டிருக்கும். அதற்குள், மிட்டாய்கள் மற்றும் பல உணவு பண்டங்கள், அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அந்த மெசினில் பணத்தை செலுத்தி, நமக்கு வெண்டுமென்கிற பண்டத்தை பெற்றுக்கொள்ளலாம்.
இதே முறையில் தனது ஸ்மார்ட்போன்களை விற்க எம் ஐ எக்ஸ்பிரஸ் கியோஸ்க்ஸ் என்ற பெயரில் வெண்டிங் மெசின்களை அறிமுகப்படுத்தவுள்ளது.
சியோமியின் இந்த திட்டம், வாடிக்கையாளர்களின் செலவை குறைக்கவும் மற்றும் அவர்கள் எளிதில் ஸ்மார்ட்போன்களை பெறவுமே துவங்கப்பட்டுள்ளது. இந்த கியோஸ்க்ஸ்-ன் வெண்டிங் மெசின் மூலம், வாடிக்கையாளர் தங்கள் அருகாமையில் உள்ள மெஷின்களில், எளிதில் ஸ்மார்ட்போன்களை பெற முடியும்.
இந்த திட்டத்தை முதலில் மெட்ரோ நகரங்களில் வெளியிடவுள்ள இந்த நிறுவனம், பிறகு அனைத்து நகரங்களுக்கும் இதனை விரிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து சியோமி நிறுவனம் கூறுகையில், இந்த கியோஸ்க்ஸ் வெண்டிங் மெசின்கள் முதலில் இந்தியாவிலுள்ள மெட்ரோ நகரங்களில் அறிமுகப்படுத்தப்படும். மேலும், இந்த மெசின்கள் எங்கெல்லாம் வைக்கப்பட்டுள்ளது என்பதை சியோமியின் எம் ஐ தளத்தில் (Mi.com) வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
பணம் செலுத்த பல வழிகளை வைத்துள்ள இந்த மெஷினில், நீங்கள் நேரடியாக பணம் செலுத்தியோ, அல்லது கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகள் வாயிலாகவோ அல்லது ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாகவோ பணம் செலுத்தி தாங்கள் விரும்பும் ஸ்மார்ட்போனை பெற்றுக்கொள்ளலாம்.
சியோமி நிறுவனம், இந்த எம் ஐ எக்ஸ்பிரஸ் கியோஸ்க்ஸ் வெண்டிங் மெசின்களை முதலில் மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதிகளான விமான நிலையம், மெட்ரோ ஸ்டேசன், ஷாப்பிங் மால்கள் மற்றும் காம்ப்ளக்ஸ் போன்ற இடங்களில் அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த மெஷினில் மொபைல்போன்கள் மட்டுமின்றி அந்த நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளையும் விற்பனைக்கு வைக்கவுள்ளது. மேலும் அதன் விலை தன் தளமான Mi.com-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் விலையின் அளவே இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
"இந்த எம் ஐ எக்ஸ்பிரஸ் கியோஸ்க்ஸ் என்பது, வாடிக்கையாளர்கள் சியோமி தயாரிப்புகளை ஆஃப்லைனில் எளிதில் பெற உதவும்" என சியோமி நிறுவனம் கூறியுள்ளது. ஆஃப்லைன் சந்தையில் இது சியோமி நிறுவனத்தின் மூன்றாவது முன்னெடுப்பு. இதற்கு முன்னர் முதலாக அனைத்து இடங்களிலும் எம் ஐ ஸ்டோரை துவங்கியது. பின் 2017ல் முதன்முதலாக, பெங்களூரில் எம் ஐ ஹோம் ஸ்டோர் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்