பாப்-அப் செல்பி கேமரா, 3 பின்புற கேமரா: அறிமுகமாகிறது சியோமியின் 'Mi 9' ஸ்மார்ட்போன்கள்!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 29 மே 2019 19:17 IST
ஹைலைட்ஸ்
  • மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது
  • இதில் பாப்-அப் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது
  • Mi 9T என்ற பெயரில் அறிமுகமாகலாம்.

சியோமி நிறுவனம் வெளியிட்ட புதிய ஸ்மார்ட்போனின் படங்கள்!

Photo Credit: Twitter / Xiaomi

சியோமி நிறுவனம், தனது ஸ்மார்ட்போன் குடும்பத்தில் மற்றொரு உறுப்பினரை அறிமுகப்படுத்தவுள்ளது. 'Mi 9' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன்கள் ஒரு தொடராக விரைவில் அறிமுகமாகவுள்ளது. இது குறித்து அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது, சியோமி நிறுவனம். சியோமி நிறுவனத்தால் பகிரப்பட்டுள்ள அந்த படத்தில் 3 பின்புற கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட்போன் இடம்பெற்றுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போனின் பெயர் என்னவாக இருக்கும் என்று வாடிக்கையாளர்கள் கூறலாம் என்றவாறு பதிவிடப்பட்டுள்ளது, இந்த புகைப்படும். பாப்-அப் செல்பி கேமராவை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் என்று கூறியுள்ள சியோமி நிறுவனம், வேறு எந்த தகவலையும் வெளியிடவில்லை. 

இந்த ஸ்மார்ட்போன் 'Mi 9' தொடர் ஸ்மார்ட்போன் எனவும், 'Mi 9T' என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், ஏற்கனவே தாய்வான் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் அங்கீகாரம் பெற்றுவிட்டது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த புது ஸ்மார்ட்போன் குறித்த தகவலை ட்விட்டரில் பதிவிட்டிருந்தது. பின்புறம் 3 கேமராக்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன்ம, முன்புறம் முழுவதும் திரையை கொண்டுள்ளது. அதனால், எந்த ஒரு சந்தேகமுமின்றி இந்த ஸ்மார்ட்போன் பாப்-அப் செல்பி கேமரா கொண்டுள்ளது என்பது உறுதியாகியுள்ளது. மேலும் '#PopUpInStyle' என்ற ஹேஸ்டேக்கின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இன்னும் உறுதியாக அறிவிக்கப்படாத இந்த 'Mi 9T' ஸ்மார்ட்போன் ற்கனவே தாய்வான் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் என்.பி.டி.சி சான்றிதழ் பெற்றுவிட்டது என்றவாறான தகவல்களும் வெளியாகியுள்ளன.

இந்த நிறுவனம், பல ஸ்மார்ட்போன்களை ரெட்மீ நிறுவனத்தின் பெயரில் வெளிட்டதற்கு பிறகு வெளியாகும் முதல் எம் ஐ ஸ்மார்ட்போன் இது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிடத்தக்கதாக, இந்த மாதத்தில் மட்டும், இந்தியாவில் 'ரெட்மீ நோட் 7S' மற்றும் சீனாவில் 'ரெட்மீ K20' ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Xiaomi, Mi 9, Triple Rear Cameras
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.