இறுதியாக Mi 10 5G இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போனில் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட், 108 மெகாபிக்சல் கேமரா மற்றும் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது. இந்த போன் மார்ச் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டது, ஆனால் ஊரடங்கு காரணமாக வெளியீடு ரத்து செய்யப்பட்டது. நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனுடன் எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்கள் 2 மற்றும் ஷாவ்மி எம்ஐ பாக்ஸ் 4 கே ஆகியவை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டன.
போனின் விலை:
Mi 10 5 ஜி-யின் விலை ரூ.49,999 ஆகும். இந்த போன் 128 ஜிபி ஸ்டோரேஜில் கிடைக்கும். 256 ஜிபி ஸ்டோரேஜுடன் இந்த போனை வாங்க ரூ.54,999 செலவாகும். இந்த போனின் முன்கூட்டிய ஆர்டர்கள் வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி முதல் தொடங்குகின. இருப்பினும், இந்த போன் எப்போது விற்பனை செய்யத் தொடங்கும் என்று சீன நிறுவனம் கூறவில்லை. Mi 10 5G ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்கப்படும்.
டூயல்-சிம் எம்ஐ 10, நிறுவனத்தின் MIUI 11 உடன் Android 10-ல் இயக்கும். இந்த போனில் 6.67 அங்குல வளைந்த AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இந்த டிஸ்ப்ளே 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தையும் 180 ஹெர்ட்ஸ் தொடு பதிலையும் கொண்டுள்ளது. போனின் உள்ளே ஒரு Qualcomm Snapdragon 865 சிப்செட், 8 ஜிபி வரை எல்பிடிடிஆர் 5 ரேம் மற்றும் 256 ஜிபி வரை யுஎஃப்எஸ் 3.0 ஸ்டோரேஜ் உள்ளது.
எம்ஐ 10 பின்புறத்தில் நான்கு கேமராக்கள் உள்ளன. இந்த கேமராவில் 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார் உள்ளது. 13 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் இரண்டு 2 மெகாபிக்சல் சென்சார்களுடன் வருகிறது. இந்த கேமராவில் 8 கே வீடியோ ரெக்கார்டிங் ஆதரவு உள்ளது. செல்ஃபி எடுக்க 20 மெகாபிக்சல் கேமரா உள்ளது.
போனின் உள்ளே 4,780 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இதில் 30W ஃபாஸ்ட் சார்ஜ் மற்றும் 30W வயர்லெஸ் சார்ஜ் மற்றும் 10W ரிவர்ஸ் சார்ஜ் ஆதரவு உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்