Xiaomi போனில் 50X Zoom கேமரா! வாவ் அப்டேட்....

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 12 அக்டோபர் 2019 11:30 IST
ஹைலைட்ஸ்
  • MIUI Camera செயலியில் "Tele 5X" zoom அம்சத்தைக் கண்டறியப்பட்டுள்ளது
  • செயலி "ultra tele" அம்சத்தைக் காட்டுகிறது
  • 8K வீடியோ ரெக்கார்டிங் ஆதரவுடன் வருகிறது

5X optical zoom மற்றும் 50X digital zoom போன்றவற்றை வழங்கும் புதிய ஸ்மார்ட்போனை ஜியோமி கொண்டுள்ளது

5X optical zoom மற்றும் 50X digital zoom போன்றவற்றை வழங்கும் புதிய ஸ்மார்ட்போனை ஜியோமி கொண்டுள்ளது. இது Huawei P30 Pro மற்றும் Oppo Reno 2-க்கு கடுமையான போட்டியாளராக வருகிறது. புதிய MIUI கேமரா செயலியின் மூலம் சமீபத்திய வெளிப்பாடு கண்டறியப்பட்டுள்ளது. MIUI 11 பீட்டா உருவாக்கத்தின் ஒரு பகுதி என்று செயலி கூறுகிறது. 

புதிய MIUI கேமரா செயலியில் XDA Developers கண்டுபிடிக்கப்பட்ட "Tele 5X" எனப்படும் கேமரா zoom மோட் அடங்கும். புதிய ஸ்மார்ட்போனில் 5X optical zoom-ஐ டெலிஃபோட்டோ லென்ஸ் ஆதரிக்குமா என்ற கேள்வியை கேமரா zoom மோட் முன்வைக்கிறது.

புதிய MIUI கேமரா செயலியில் "ultra tele" என அழைக்கப்படும் ஒரு அம்சம் உள்ளது, "தொலைதூர பொருட்களை அதிக நுனுக்கங்களுடன் பிடிக்க 50X zoom பயன்படுத்தவும்" என்று XDA Developers குறிப்பிட்டுள்ளனர். மேலும், ultra tele அம்சத்தின் மூலம் புதிய telephoto திறன்களைக் காட்டும் ஒரு ஐகான் உள்ளது.

இந்த ஐக்கான் மூலம் ultra tele அம்சத்தக் காட்டுகிறது
Photo Credit: XDA Developers

ஜியோமி அதன் புதிய வளர்ச்சியைப் பற்றி எந்த விவரங்களையும் வெளியிடவில்லை. இருப்பினும், 8K வீடியோ ரெக்கார்டிங் ஆதரவுடன் 30fps பிரேம் வீதத்தில் ஒரு தொலைபேசியை கொண்டு வர நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று MIUI கேமரா செயலியின் முந்தைய பதிப்பு பரிந்துரைத்தது. அதே மாதிரியில் 5X digital zoom மற்றும் 50X digital zoom ஆகியவற்றை ஆதரிக்கும் புதிய telephoto camera-வும் இதில் இருக்கலாம்.

கடந்த மாதம், ஜியோமி தனது புதிய கான்செப்ட் தொலைபேசியாக 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா சென்சார் கொண்ட Mi Mix Alpha-வை வெளியிட்டது. 8X digital zoom வழங்கும் விதமாக கேமரா சென்சார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

20X digital zoom கொண்ட Oppo Reno 2  மற்றும் 50X digital zoom உடன் 5X digital zoom கொண்ட  Huawei P30 Pro ஆகியவற்றை சமீபத்திய காலங்களில் பார்த்தோம். சாம்சங் தனது Galaxy S11 flagship-ஐ 108 மெகாபிக்சல் கேமரா சென்சார் மூலம் 5X optical zoom வழங்குவதாக வதந்தி பரவியுள்ளது. இதேபோல், வரவிருக்கும்  Google Pixel 4-ல் 8X zoom ஆதரவை வழங்கக்கூடும் என்று சமீபத்திய அறிக்கை பரிந்துரைத்தது.

Advertisement

ஜியோமி தனது புதிய தொலைபேசியை மேம்படுத்தப்பட்ட கேமரா அமைப்புடன் கொண்டு வர தயாராக உள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Xiaomi, MIUI 11, MIUI Camera app
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஒப்போ ஃபைன்ட் X9s இன் இந்திய விலை மற்றும் விரிவான விவரக்குறிப்புகள் வெளியீட்டிற்கு முன்னதாக கசிந்தன
  2. கூகுள் ஐ/ஓ 2026-இல் 'ஜெமினி ஸ்பார்க்' என்ற புதிய ஏஐ ஏஜென்ட் அறிமுகமாக வாய்ப்பு
  3. அமேசான் கிரேட் சம்மர் சேல் 2026: ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கான சிறந்த சலுகைகள்
  4. அமேசான் கிரேட் சம்மர் சேல் 2026: ஒன்பிளஸ் பேட் லைட், சியோமி பேட் 8 மற்றும் பல டேப்லெட்களின் சிறந்த சலுகைகள்
  5. அமேசான் கிரேட் சம்மர் சேல்: டி-லின்க், டெண்டா மற்றும் பல பிராண்டுகளின் வைஃபை ரௌட்டர்களுக்கான சிறந்த சலுகைகள்
  6. எண் சரிபார்க்கப்படாத புதிய ஜிமெயில் கணக்குகளுக்கு இலவச சேமிப்பகத்தைக் குறைக்க கூகுள் சோதனை
  7. மோட்டோ G37, G37 பவர் போன்களின் இந்திய அறிமுகத் தேதி அறிவிப்பு, முக்கிய அம்சங்கள் வெளியீடு
  8. HMD வைப் 2 5G விலை, முக்கிய விபரங்கள் அறிமுகத்திற்கு முன்பே இணையத்தில் கசிந்தன
  9. சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்ட் 8, Z ஃபிளிப் 8 போன்கள் கூகுள் ஜெமினி AI அம்சங்களுடன் அறிமுகம்: அறிக்கை
  10. அமேசான் கிரேட் சம்மர் சேல் 2026: கேமிங் சாதனங்கள் (Gaming Peripherals) மீதான சிறந்த டீல்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.