ஆச்சர்யமூட்டும் அப்டேட் கொடுத்த ஷாவ்மி! மகிழ்ச்சி வெள்ளத்தில் பயனர்கள்!!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 3 ஏப்ரல் 2020 15:16 IST
ஹைலைட்ஸ்
  • ஷாவ்மி 144 மெகாபிக்சல் கேமரா போனில் பணிபுரிவதாகக் கூறப்படுகிறது
  • இந்த வதந்தியான ஸ்மார்ட்போன் எப்போது வெளிவரும் என்பதில் எந்த தகவலும் இல்லை
  • ஷாவ்மி தற்போது 108 மெகாபிக்சல் கேமராவுடன் பல போன்களை வழங்குகிறது

Xiaomi Mi Note 10, 108 மெகாபிக்சல் கேமராவுடன் வருகிறது

ஷாவ்மி நிறுவனம் அதன் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களுக்கும் ஒரு தனித்துவமான அம்சங்களைக் கொண்டுவருகிறது. சமீப காலமாக, உயர் மெகாபிக்சல் பட சென்சார்கள் கொண்ட போனை அறிமுகம் செய்வதில் ஷாவ்மி முன்னோடியாக இருக்கிறது. அதற்கு எடுத்துகாட்டாக, Xiaomi Mi Note 10, 108 மெகாபிக்சல் கேமரா கொண்ட முதல் ஸ்மார்ட்போனை கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து கடந்த மாதம் 108 மெகாபிக்சல் ஷூட்டருடன் Xiaomi எம்ஐ 10 ப்ரோவை அறிமுகப்படுத்தியது. 

அதைத் தொடந்து, தற்போது 144 மெகாபிக்சல் முதன்மை கேமரா சென்சார் கொண்ட போனில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Mi 10S Pro அல்லது Mi CC10 Pro இந்த 144 மெகாபிக்சல் கேமரா போனாக இருக்கலாம் என்று வதந்தி பரவியுள்ளது.

“ஷாவ்மி 144MP கேமரா சென்சார் கொண்ட போனில் பணிபுரிகிறது. இது Mi 10S Pro அல்லது Mi CC10 Pro ஆக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று டிப்ஸ்டர் சுதான்ஷூ ட்வீட் செய்தார். 

Mi 10 Pro மற்றும் Mi CC9 Pro ஆகிய இரண்டு போன்களும் 108 மெகாபிக்சல் கேமராக்களைக் கொண்டுள்ளன. அதனால்தான் Mi 10S Pro மற்றும் Mi CC10 Pro ஆகியவை இன்னும் அதிக மெகாபிக்சல் கொண்ட கேமராவைக் கொண்டுவரும். அதிக மெகாபிக்சல் சென்சார்களைச் சேர்க்காமல் ஆப்பிள் மற்றும் கூகுள் தொடர்ந்து சிறந்த கேமரா ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Xiaomi, Xiaomi Mi 10S Pro, Xiaomi Mi CC10
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. 2026-இல் உங்கள் ஏர்டெல் இ-சிம்மை (Airtel eSIM) செயல்படுத்துவது எப்படி: படிப்படியான வழிகாட்டி
  2. இந்தியாவில் அறிமுகமாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக 'ஒன்பிளஸ் N6x' பேட்டரி திறன் வெளிப்படை
  3. வாட்ஸ்அப் ஐஓஎஸ் தளத்தில் புதிய உருண்டையான செய்தி குமிழி வடிவமைப்பை அறிமுகப்படுத்துகிறது: அறிக்கை
  4. ஆப்பிள் ஹெல்த், மருத்துவப் பதிவுகளுடன் தனிப்பயன் பதில் தர ஓபன்ஏஐ 'சாட்ஜிபிடி ஹெல்த்' அறிமுகம்!
  5. iQOO Z11 Lite 5G vs Moto G37 Power vs Oppo K14x 5G: இந்தியாவில் விலை, அம்சங்கள் ஒப்பீடு
  6. 50-மெகாபிக்சல் கேமரா, 6,500mAh பேட்டரியுடன் iQOO Z11 Lite இந்தியாவில் அறிமுகம்: விலை, அம்சங்கள்
  7. மோட்டோ பேட் 70 ஆகஸ்ட் 9ல் இந்தியாவில் அறிமுகம்; டைமன்சிட்டி 6400, 10,200mAh பேட்டரியுடன் வருகிறது!
  8. வாட்ஸ்அப் இருபடிச் சரிபார்ப்பு(Two-Step Verification) PINக்கு பதிலாக வலுவான பாஸ்வேர்டை அறிமுகப்படுத்தக்கூடும்
  9. கணக்கு மீட்டெடுப்பிற்காக 'செல்ஃபி வீடியோ' உள்நுழைவு முறையை கூகிள் அறிமுகப்படுத்துகிறது
  10. Boat Nirvana Eutopia 2 ANC இந்தியாவில் அறிமுகம்: 45dB ANC மற்றும் 80 மணிநேர பேட்டரி லைஃப்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.