குறைந்த விலையில் அதிகப்படியான ஸ்மார்ட்போன்களை வெளியிடும் ஜியோமி நிறுவனம், இந்தாண்டு அதிக விலையில் உயர்தரமான Xiaomi 14 Civi செல்போன் மாடலை அறிமுகப்படுத்தி உள்ளது. Civi என்றால் சினிமாடிக் விஷன்(Cinematic Vision) என்பதன் சுருக்கமாகும். OnePlus 12R மற்றும் Samsung Galaxy A55 போட்டியாக இந்த மாடல் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இதுவரை குறைந்தவிலை செல்போன்களில் கவனம் செலுத்தி வந்த ஜியோமி, இப்போது மற்ற பெரிய நிறுவனங்கள் போலவே அதிகவிலையில் தரமான செல்போன்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற முடிவில் இறங்கியுள்ளது.
நிறங்கள் - குரூஸ் ப்ளூ, மேட்சா கிரீன் மற்றும் ஷேடோ பிளாக் என மூன்று நிறத்தில் கிடைக்கிறது. Xiaomi 14 Civi நிறுவனத்தின் பிரீமியம் 14 தொடரின் ஒரு பகுதியாகும். அதாவது நீங்கள் இந்த செல்போனில் உயர்தரத்தை எதிர்பார்க்கலாம். மெட்டல் பாடியுடன் வந்துள்ளது. 6.55-இன்ச் டிஸ்ப்ளே உள்ளது.
கேமரா சென்சார்களை கொண்ட லைக்கா கேமரா ரிங் சிறப்பபாக உள்ளது. அனைத்து பட்டன்களும் வலது பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளன. ஒரு கையால் பயன்படுத்தப்படும் போது விரல்களில் இயக்க நன்றாக இருக்கும். ஐஆர் பிளாஸ்டர் மேல் பேனலில் அமைந்துள்ளது. அதே சமயம் சார்ஜ் செய்வதற்கான டைப்-சி போர்ட் கீழ் பேனலில் உள்ளது. இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் அமைப்பு அற்புதமாக இருக்கிறது.
Xiaomi 14 Civi டிஸ்பிளே பார்க்க சிறிதாக தெரிந்தாலும் மிக வலிமையானது
6.55-இன்ச் குவாட் Curved AMOLED டிஸ்ப்ளே
120Hz புதுப்பிப்பு வீதம்
3000 நிட்ஸ் உச்ச பிரகாசம் தருகிறது.
இது தவிர டால்பி விஷன், HDR10+, 460PPI மற்றும் TÜV Rheinland Low Blue Light வசதிகளை கொண்டுள்ளது. IP68 மதிப்பீட்டை மட்டும் பெறவில்லை என்பது சற்று குறையாக உள்ளது. இதனால் தண்ணீரில் இருந்து கொஞ்சம் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
Xiaomi 14 Civi டிஸ்ப்ளே பிரகாசமாக உள்ளது. அதிகமாக படங்கள் பார்ப்பதற்கும் கேமிங்கிற்கும் ஏற்றது. இதில் உள்ள சிறப்பான அம்சம் என்னவென்றால், நேரடி சூரிய ஒளியின் கீழ் கூட, தெளிவாகத் தெரியும். Xiaomi 14 Civi உள்ள மிதக்கும் Curved AMOLED டிஸ்ப்ளே பிரீமியம் உணர்வைத் தருகிறது.
பிரைமரி கேமரா - f/1.63 OIS உடன் 50MP
டெலிஃபோட்டோ - f/1.98 வசதியுடன் கூடிய 120-டிகிரி வைடு கவர் ஆகும் 12MP அல்ட்ரா-வைட் கேமரா
செல்ஃபிக்கு - 32எம்பி அல்ட்ரா-வைட் செல்ஃபி கேமரா
இதில் உள்ள சிறந்த ஆட்டோஃபோகஸ் திறன் மூலம் பகலில் சீரான புகைப்படங்களை எடுக்க முடியும். வெவ்வேறு லைட்டிங் நிலைமைகளுக்கு பிரகாசத்தை மாற்றியமைக்கும் திறன் கொண்டுள்ளது. பெரும்பாலான லைட்டிங் நிலைகளில் தோல் டோன்களை நன்றாக காட்டுகிறது. அல்ட்ரா-வைட் ஷாட்களில் 14 சிவி சிறப்பாக செயல்படுகிறது.
Snapdragon 8s Gen 3 மொபைல் இயங்குதளத்தை கொண்டுள்ளது
8 ஜிபி RAM + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி RAM + 512 ஜிபி மெமரி என இரண்டு திறனில் கிடைக்கிறது
எந்த தடுமாற்றத்தையும் சந்திக்காமல், பல பயன்பாடுகளுக்கு இடையில் நீங்கள் சிரமமின்றி மாறலாம். எந்தவிதமான குறைபாடுகளும் இல்லாமல் பிழையின்றி செயல்படுகிறது. Xiaomiயின் புதிய IceLoop கூலிங் தொழில்நுட்பம் செல்போனை சூடாகாமல் தடுக்கிறது.
Civi 4700mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. வேகமாக சார்ஜ் செய்ய 67W பாஸ்ட் சார்ஜர் வசதியை கொண்டுள்ளது. 4610mAh பேட்டரியைக் கொண்ட விலையுயர்ந்த Xiaomi 14 விட இந்த போன் சிறப்பாக செயல்பட்டது. நீங்கள் முன்னதாக MIUI ஐப் பயன்படுத்தியிருந்தால் HyperOS நிச்சயமாக விரும்பத்தக்கதாக இருக்கும். 50 ஆயிரத்துக்கும் கீழ் கிடைக்கும் போன்களில் இது மிக தரமானது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்