Xiaomi தனது பண்டிகை விற்பனையின் புள்ளிவிவரங்களை தொகுத்துள்ளது. மேலும், ஒரு மாதத்தில் 12 மில்லியன் சாதனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறது. அந்த 12 மில்லியனில், 8.5 மில்லியன்கள் ஜியோமி தொலைபேசிகளாக இருந்துள்ளன. மேலும், பண்டிகை விற்பனையின் போது ஆண்டுதோறும் 40 சதவீத வளர்ச்சி அடைந்து வருகிறது. ஜியோமி இந்த மாபெரும் விற்பனை எண்களை செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 29 வரை கணக்கிட்டுள்ளது. இந்த காலம் அமேசான், பிளிப்கார்ட் மற்றும் நிறுவனத்தின் Mi.com ஆகியவற்றில் தீபாவளி விற்பனையால் நிரப்பப்பட்டது. அதிக விற்பனையை ஈர்ப்பதற்காக,ஜியோமி மாறுபட்ட தயாரிப்புகளுக்கு அதிக தள்ளுபடிகள் மற்றும் ஒப்பந்தங்களை வழங்கியது.
கடந்த பண்டிகை காலத்துடன் ஒப்பிடும்போது ஒட்டுமொத்த YOY வளர்ச்சி விற்பனையில் 40 சதவீதமாக இருந்த போதிலும், ஜியோமியின் ஸ்மார்ட்போன்கள் விற்பனை வளர்ச்சியும் ஆண்டுக்கு 37 சதவீதமாக இருந்தது வருகிறது. மேற்கூறிய காலக்கெடுவில் 8.5 மில்லியன் ஸ்மார்ட்போன் விற்பனை எண் இந்தியாவில் எந்தவொரு பிராண்டிலிருந்தும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது என்று ஜியோமி கூறுகிறது. தொலைபேசிகள் பிரிவில், Redmi Note 7 சீரிஸ் அதிக விற்பனையாகும். அமேசானில், தீபாவளி விற்பனையின் போது அதிகம் விற்பனையான பத்து போன்களில் 9 போன்கள் ஜீயோமியாகும். Redmi Note 7 சீரிஸ் – Redmi Note 7S மற்றும் Redmi Note 7 Pro ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பட்ஜெட் பிரிவில், Redmi 7 மற்றும் Redmi 7A ஆகியவை அமேசான் இந்தியாவில் அதிகம் விற்பனையாகின.
குறிப்பிடப்பட்ட ஒரு மாதத்தில் 6,00,000 Mi டி.வி.களை விற்க முடிந்தது என்று சீன mega-giant கூறுகிறது. மேலும் இது 48 சதவீத YOY வளர்ச்சியைக் குறிக்கிறதது. சில நாட்களுக்கு முன்பு, ஜியோமி 5,00,000 Mi டிவிகளை விற்றதாக அறிவித்திருந்தது. இப்போது சில நாட்களுக்குப் பிறகு, மேலும் 1,00,000 யூனிட் விற்பனை அடைந்துள்ளது.
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் இரண்டிலும் Mi டிவி ரேஞ்ச் அதிகம் விற்பனையானது என்று ஜியோமி கூறுகிறது. மேலும், 3 மில்லியனுக்கும் அதிகமான Mi சுற்றுச்சூழல் தயாரிப்புகள் மற்றும் அணிகலண்களை ஜியோமி விற்றதுள்ளது. Mi Band range, Mi Power Banks range, Mi Air Purifier 2S ஆகியவை அமேசானில் அவற்றின் வகைகளில் (categories) அதிகம் விற்பனையானதாகும். Mi Smart Water Purifier-ம் விற்பனையைத் தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத்தீந்தன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்