பிரைவசி பயத்திற்கு குட்பை..! வந்து விட்டது சாம்சங்கின் AltZ Life தொழில்நுட்பம்!!

விளம்பரம்

இப்போது உள்ள டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட்போன்கள் என்பது அடிப்படைத் தேவையாகிவிட்டன. பெரும்பாலானோர் தங்களது அன்றாட பொழுதில் பாதி நேரத்தை ஸ்மார்ட்போனில் செலவிடுகின்றனர். ஸ்மார்ட்போனையே சார்ந்திருக்கின்றனர். 

இப்படியான சூழலில் பிரைவசி எனப்படும் பயனர்களின் தனிப்பட்ட விஷயங்களை  பாதுகாப்பது என்பது பெரும் சவாலாகவே உள்ளது. பிரைவசி இல்லாதவர்கள் எவரும் இல்லை. எனக்கு பிரைவசி எதுவும் இல்லை என்று அவ்வளவு எளிதாக யாரும் சொல்லி விட முடியாது. உதாரணத்திற்கு நாம் நம்முடைய நெருங்கிய நண்பர்களிடம் மெசேஜ் அனுப்பியிருப்போம். அதை குடும்ப உறுப்பினர்களோ மற்றவர்களோ பார்ப்பதற்கு விரும்ப மாட்டோம். 
 

இதே போல் புகைப்படங்கள், பாஸ்வேர்டுகள், ஆவணங்கள், மெசேஜ் சாட் உள்ளிட்ட பல விஷயங்கள் நமக்கு தனிப்பட்டவையாக இருக்கும். இதை குடும்ப உறுப்பினர்கள் உட்பட மற்றவர்கள் அணுகுவதற்கோ, பார்ப்பதற்கோ நாம் விரும்ப மாட்டோம். ஆனால், சந்தர்ப்ப சூழலில், இதுபோன்ற தனிப்பட்ட விஷயங்களை ஸ்மார்ட்போனில் யாருக்கும் தெரியாமல் வைத்து, பயன்படுத்துவது என்பது கடினமான விஷயம். நணபர்கள், குடும்ப உறுப்பினர்கள் நமது போனை கேட்பார்கள். அப்போது அவர்களிடம் நமது போனை கொடுக்காமலும் இருக்க முடியாது. அப்படியே கொடுத்தாலும் நமது தனிப்பட்ட விஷயங்களைப் பார்த்து விடுவார்களோ என்ற பயத்துடன் தான் கொடுப்போம். 

இனி இதுபோன்ற தனிப்பட்ட விஷயங்களைக் குறித்து கவலைப்படத் தேவையில்லை. வந்து விட்டது ஆல்ட் ஜீ லைப் (AltZ Life). இதன் மூலம் இனி ஸ்மார்ட்போனில் நமக்கென்று ஒரு தனி இடத்தை நிர்வகித்துக் கொள்ளலாம். மற்றவர்களிடம் தைரியமாக ஸ்மார்ட்போனைக் கொடுக்கலாம். பிரைவசி பற்றி அச்சப்படத் தேவையில்லை.

'AltZ Life' என்றால் என்ன?

AltZ என்பது இந்த டிஜிட்டல் யுகத்தில் நமது பிரைவசியை மற்றவர்கள் பார்த்து விடுவார்களோ என்ற பயமில்லாத, சுதந்திரமான வாழ்க்கையை வழங்கும் ஒரு அற்புத அம்சம். இனி தனிப்பட்ட விஷயங்கள் தனிப்பட்டதாகவே இருக்கும். அதில் மற்றவர்களின் தலையீடு எதுவும் இருக்காது.

கற்பனை செய்து பாருங்கள். உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள டேட்டா, தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு ஒரு சுலபமான வழி இருந்தால் எப்படி இருக்கும்?  இனி உங்கள் ஸ்மார்ட்போனை குடும்ப உறுப்பினர்களிடமோ, நண்பர்களிடமோ தைரியமாக கொடுக்கலாம், பிரைவசிக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று கூறினால் எப்படி இருக்கும்?

நல்லது. உங்கள் கற்பனை இப்போது நனவாகி விட்டது. அதுவும் வெறும் டபுள் க்ளிக்கில் நீங்கள் கற்பனை செய்த அத்தனை அம்சங்கள். சுருக்கமாக சொல்லப்போனால், ஸ்மார்ட்போனை இருமுறை தட்டினால் போதும், உங்கள் பிரைவசி தகவல்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும். மற்றவர்களும் உங்கள் ஸ்மார்ட்போனை அவர்களது தேவைக்கு பயன்படுத்தலாம். உங்கள் பிரைவசிக்கு எந்த பாதிப்பும் இல்லை. அது தான் AltZ Life.
 

இந்தியாவில் முதன்முதலாக சாம்சங் நிறுவனம் தற்போது AltZ Life பிரைவசி பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டு வந்துள்ளது.

AltZ Life எப்படி இருக்கும், எந்த ஸ்மார்ட்போனில் உள்ளது?

இந்தியாவில் முதன்முதலாக சாம்சங் நிறுவனம் தற்போது AltZ Life பிரைவசி பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன் முதற்கட்டமாக கேலக்ஸி A51 மற்றும் கேலக்ஸி A71 ஆகிய ஸ்மார்ட்போன்களில் 'ஆல்ட் ஜீ லைப்' அம்சம் புகுத்தப்பட்டுள்ளது. 

இந்த ஸ்மார்ட்போனின் ஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் பட்டனை இருமுறை தட்டினால் போதும். ஆல்ட் ஜீ திரையில் தோன்றும். அதில் நீங்கள் பாதுகாப்பாக வைக்க வேண்டிய ஆவணங்கள், ஆப்ஸ், பிரவுசர், கேலரி, புகைப்படங்கள், மெசேஜ் சாட், பாஸ்வேர்டு போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம். இப்போது மறுபடியும் டபுள் டச் செய்தால், நீங்கள் தேர்வு செய்த அனைத்து விஷயங்களும் பாதுகாக்கப்படும். 

மற்றவர்கள் யாரும் அதை ஓபன் செய்ய முடியாது. மறுபடியும் அதை ஓபன் செய்ய வேண்டுமென்றால், விரல் ரேகை சென்சாரில் மீண்டும் இருமுறை தட்ட வேண்டும். இதன் மூலம் யார் வேண்டுமானாலும் உங்கள் ஸ்மார்ட்போனை உபயோகப்படுத்தலாம். ஆனால், உங்களுடைய பிரைவசியைத் தொடக் கூட முடியாது. 


சாம்சங் கேலக்ஸி A51, கேலக்ஸி A71 ஸ்மார்ட்போனில்Alt Z Life வசதியை ஆக்டிவேட் செய்வது எப்படி, பயன்படுத்துவது எப்படி என்பது குறித்த விவரங்களை இங்குத் தெரிந்துகொள்ளலாம்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Mobiles, Samsung Alt Z, Alt Z meaning

தொடர்புடைய செய்திகள்

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »