Photo Credit: Weibo
சில நாட்களுக்கு முன்னர் விவோ நிறுவனத்தின் துணை பிராண்டாக ஐக்யூ (IQOO) அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்த புதிய பிராண்டின் கீழே எதிர்காலத்தில் பிரீமியம் தயாரிப்புகள் வெளியாகவுள்ளதாக தகவல் வந்துள்ளது.
மேலும் தற்போதைய தகவல்கள் படி 'மடங்கும் போன்' ஒன்று இந்த பிராண்டின் கீழ் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இப்படி வெளியாகும் இந்த ஐக்யூவின் மடங்கும் போன்களின் புகைப்படங்கள் வெய்போ தளத்தில் கசிந்துள்ளது.மேலும் புகைப்படத்திலிருந்தே அது மடங்கும் மாடல் போன்தான் என்று கணிக்க முடிகிறது.
அத்துடன் இந்த ஸ்மார்ட்போனை டேபாக மாற்றவும் முடியும் என பல தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. ஏற்கெனவே சாம்சங் நிறுவனம் சார்பாக மடங்க கூடிய ஸ்மார்ட்போன் ஒன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் விவோவின் இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வெளியாகியுள்ள புகைப்படத்தை வைத்து பார்க்கும் போது முன்னால் செல்ஃபி கேமராயில்லை என்றும் இதனால் பாப் அப் கேமரா அல்லது திரைக்கு பின்னர் இந்த கேமரா வைத்திருக்கலாம் என பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
புகைப்படங்கள் தவிர இந்த புதிய மடக்கும் ஸ்மார்ட்போனின் விலையை பற்றிய தகவல்களும் வெளியாகியுள்ளது. அதன்படி ரூபாய் 53,000 விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. என்னதான் இப்படி தகவல்கள் வெளியானாலும் விவோ நிறுவனம் சார்பாக அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
மடக்கும் (foldable)போன்களை பொருத்தவரை சாம்சங் நிறுவனம் தனது மடக்கும் போன்களை வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. சாம்சங்கின் இந்த புதிய தயாரிப்பு ஓன்றுக்கும் மேற்பட்ட திரைகளுடன் புத்தக வடிவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்