Vivo Z1x ஸ்மார்ட்போன் முதல் முறையாக இந்தியாவில் இன்று விற்பனைக்கு வரவுள்ளது. விவோ மற்றும் பிளிப்கார்ட் இணையதளங்களில் நடைபெறவுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு துவங்கவுள்ளது. இந்த Vivo Z1x ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை பல அறிமுக சலுகைகள் மற்றும் வங்கி தள்ளுபடிகளுடனேயே நடைபெறவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை பற்றி பேசுகையில் Vivo Z1x ஸ்னேப்டிராகன் 712 எஸ்.ஓ.சி ப்ராசஸர் கொண்டுள்ளது, கேமிங்கை மையப்படுத்தி அறிமுகமாகியுள்ளது. 48 மெகாபிக்சல் முதன்மை சோனி கேமரா சென்சாருடன் 3 பின்புற கேமராக்கள், 32 மெகாபிக்சல் செல்பி கேமரா என அட்டகாசமான கேமரா சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இந்த போனின் முதல் விற்பனை பற்றிய முழு தகவல்கள் உள்ளே!
இந்தியாவில் கடந்த வாரம் அறிமுகமான Vivo Z1x ஸ்மார்ட்போனில் 6GB RAM மற்றும் 64GB சேமிப்பு வகை 16,990 ரூபாய் என்ற விலையிலும், மற்றும் 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு வகை 18,990 ரூபாய் என்ற விலையிலும் விற்பனையாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நீலம் (Fusion Blue) மற்றும் ஊதா (Phantom Purple) என்ற இரண்டு வண்ணங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.
Vivo Z1x விற்பனை சலுகைகளாக எச்.டி.எஃப்.சி வங்கி கார்டுகள் மற்றும் ஈ.எம்.ஐ பரிவர்த்தனைகளுக்கு 1,250 தள்ளுபடி வழங்கப்படவுள்ளது. பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரடிட் கார்டு அல்லது ஆக்சிஸ் வங்கி பஷ் கிரடிட் கார்டு பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை பெற்றால் 5 சதவிகிதம் தள்ளுபடி. அதுமட்டுமின்றி ஜியோ நிறுவனம் 6,000 ரூபாய் வரை சலுகைகளை வழங்கவுள்ளது. 12 மாதங்கள் வரை கட்டணமில்லாத ஈ.எம்.ஐ.களும் இந்த ஸ்மார்ட்போனிற்கு கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் 13ஆம் தேதியான இன்று மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் மற்றும் விவோ இந்தியா இ-ஸ்டோர்களில் இந்த ஸ்மார்ட்போன் முதன்முறையாக விற்பனைக்கு வரவுள்ளது.
இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் Funtouch OS 9.1-ஐ மையப்படுத்தி ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டு செயல்படுகிறது. சூப்பர் AMOLED திரை மற்றும் வாட்டர்-ட்ராப் நாட்ச் ஆகிய அம்சங்களுடன் 6.38-இன்ச் full-HD+ (1080x2 340 பிக்சல்கள்) திரையை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. Vivo Z1x ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்டிராகன் 712 எஸ்.ஓ.சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
கேமராக்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன், 3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது, 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் 120 டிகிரி வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமரா. முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமராவை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 22.5W ஃப்ளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்துடன் 4,500mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வை-பை 802.11ac, ப்ளூடூத் 5.0, 3.5mm ஆடியோ ஜாக், USB டைப்-C போர்ட், GPS, மற்றும் 4G LTE ஆகிய தொடர்பு வசதிகளை கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்