விவோ நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனான 'விவோ Z1 Pro'-வை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்று மதியம் 12 மணியளவில் ஒரு நிகழ்வின் மூலம் இந்த அறிமுகத்தை செய்துள்ளது விவோ நிறுவனம். இந்த அறிமுகத்தின் மூலம் ஸ்னேப்ட்ராகன் 712 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெயரை பெற்றுள்ளது இந்த 'விவோ Z1 Pro'. மெலும் இந்த ஸ்மார்ட்போன் 32 மெகாபிக்சல் அளவிலான ஹோல்-பன்ச் கேமரா, 5,000mAh பேட்டரி, 18W அதிவேக சார்ஜர் பொன்ற பல அம்சங்களுடன் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, கேம் மோட் 5.0 கொண்ட இந்த ஸ்மார்ட்போன் பப்ஜி மொபைல் கிளப் ஓபன் 2019-ன் அதிகாரப்பூர்வமான ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்மார்ட்ப்போனின் சிறப்பம்சங்களை பார்க்கையில், சமீபத்தில் வெளியான சாம்சங் கேலக்சி M40, ரெட்மீ நோட் 7 Pro ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி என்ன சிறப்பம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது?
'விவோ Z1 Pro': விலை மற்றும் விற்பனை!
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த 'விவோ Z1 Pro' ஸ்மார்ட்போனின் அடிப்படை விலை 14,990 ரூபாய். இந்த 14,990 ரூபாய் 'விவோ Z1 Pro' ஸ்மார்ட்போன் 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவை கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி, 6GB RAM + 64GB சேமிப்பு அளவு மற்றும் 6GB RAM + 128GB சேமிப்பு அளவு என மொத்தம் மூன்று வகைகளில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. 6GB RAM + 64GB சேமிப்பு அளவு வகையின் விலை 16,990 ரூபாய். 6GB RAM + 128GB சேமிப்பு அளவு வகையின் விலை 17,990 ரூபாய். இந்த ஸ்மார்ட்போன்கள் மிரர் ப்ளாக் (Mirror Black), சோனிக் ப்ளாக் (Sonic Black), மற்றும் சோனிக் ப்ளூ (Sonic Blue) என மூன்று வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது.
இந்த 'விவோ Z1 Pro' ஸ்மார்ட்போன் ஃப்ளிப்கார்ட் மற்றும் விவோ இந்தியா ஆன்லைன் தளத்திலும் விற்பனையாகவுள்ளது. இதன் முதல் விற்பனை ஜூலை 11 அன்று மதியம் 12 மணிக்கு துவங்கவுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனை ஐசிஐசிஐ கார்டுகளை பயன்படுத்தி பெற்றால் 750 ரூபாய் உடனடி தள்ளுபடியையும் வழங்கவுள்ளது.
'விவோ Z1 Pro': சிறப்பம்சங்கள்!
ஸ்மார்ட்போன் உபயோகிக்கும் இளைஞர்களுக்காக பிரத்யேகமாக இந்த ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது. 4D வைப்ரேஷன், 3D சவுண்டுடன் கெம் மோட் 5.0 கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. மேலும் மல்டி-டர்போ அம்சம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன், சென்டர் டர்போ, AI டர்போ, நெட் டர்போ கூளிங் டர்போ, ART++ டர்போ என ஸ்மார்ட்போன் வேகமாக செயல்பட பல ட்ர்போ அம்சங்களை கொண்டுள்ளது. மேலும், கூகுள் அசிஸ்டன்ட்-கென ஒரு பிரத்யேக பட்டனும் இந்த ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ளது.
இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டு செயல்படுகிறது. 6.53-இன்ச் FHD+ (1080x2340 பிக்சல்கள்) திரை, 19.5:9 திரை விகிதம், ஹோல்-பன்ச் திரை என்ற திரை அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் ஸ்னேப்ட்ராகன் 712 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. 16 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் 120 டிகிரி வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் கேமரா. அதுமட்டுமின்றி 32 மெகாபிக்சல் அளவில் ஹோல்-பன்ச் செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.
5,000mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ள இந்த 'விவோ Z1 Pro', 18W அதிவேக சார்ஜரையும் கொண்டுள்ளது. 201 கிராம் எடை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், 162.39x77.33x8.85mm என்ற அளவுகளை கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்