இந்தியாவில் மீண்டும் விவோ y83ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு!

விளம்பரம்
Written by Roydon Cerejo மேம்படுத்தப்பட்டது: 14 டிசம்பர் 2018 15:29 IST
ஹைலைட்ஸ்
  • விவோ y83 ப்ரோ மாடலானது, ரூ.15,990க்கு அறிமுகமானது.
  • இது இரண்டாவாது முறையாக விலை குறைக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் தற்போது ரூ.13,990 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

விவோ y83 ப்ரோ மாடலுக்கு நிரந்திர விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. அதன் விலையானது தற்போது ரூ 13,990 ஆகும்.

இந்த வருடம், ஆகஸ்ட் மாதத்தில் விவோ y83 ப்ரோ அறிமுகப்படுத்தப்பட்ட போது அதன் விலை ரூ.15,990 ஆகும். தற்போது அதன் விலை ரூ.13,990 ஆக குறைந்துள்ளது. விவோ y83 ப்ரோவில் 4ஜிபி ரேம், 64 ஜிபி உள்சேமிப்பு திறன், டிஸ்பிளே நாட்ச் மற்றும் பின்பக்கம் இரு கேமிராவைக் கொண்டுள்ளது.

இதன் விலையில் தற்போது ரூ.2000 வரை குறைந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனாது ஜூன் மாதம் வெளியான விவோ y83ன் மேம்படுத்தப்பட்ட வேரியண்ட் ஆகும். அதன் விலை ரூ.13,990 ஆகும். இந்த போனில் 6.22 இன்ச் நாட்ச் டிஸ்பிளே மற்றும் பின்பக்கம் டூயல் கேமரா கொண்டுள்ளது.

விவோ y83 ப்ரோ வேரியண்டின் விலை நிரந்தரமாக குறைக்கப்பட்டுள்ளதை கேட்ஜெட் 360 உறுதி செய்துள்ளது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் விவோ y83 ப்ரோவின் பழைய விலை இதுவரை மாற்றம் செய்யப்படவில்லை. இருப்பினும் விரைவில் மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விவோ ஒய்83 ப்ரோவின் முக்கியம்சங்கள்:

இந்த ஸ்மார்போனில் இரட்டை சிம்களை பயன்படுத்திக் கொள்ளலாம். விவோ ஒய்83 ப்ரோ funtouch OS 4.0ல் இயங்குகிறது. இதிலிருக்கும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ ஆகும். 6.22 இன்ச் ஹெச்டி+ full view 2.0 IPS உடன் திரை வீதம் 19:9 என்றளவில் இருக்கும். இதன் ப்ராசஸர் மீடியாடெக் ஹீலியோ பி22 ஆக்டோ - கோர் ஆகும். விவோ y83 ப்ரோவில் 8 மெகா பிக்சல் செல்ஃபி கேமிரா உள்ளது. 64ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் கொண்டது. 3260 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ரேம் தட்டுப்பாட்டால் ஒன்ப்ளஸ் பேட் கோ 2 மற்றும் பேட் லைட் டேப்லெட் விலைகள் இந்தியாவில் கணிசமாக உயர்ந்துள்ளன
  2. ரெட்மி நோட் 17 இந்திய நிறங்கள், சேமிப்பக விவரங்கள் கசிவு; சீன வெளியீட்டுக்கு முன்பே முக்கிய அம்சங்கள் வெளியீடு
  3. ரெட்மி டர்போ 5 விமர்சனம்: பலரை ஈர்க்கும் கேமிங்-கிரேட் ஸ்மார்ட்போன்
  4. சாம்சங் கேலக்ஸி M47 5G இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே கணிசமான விலை உயர்வைப் பெற்றுள்ளது
  5. சைபர் தாக்குதலுக்கான மென்பொருளை உருவாக்க ChatGPT-யைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஜப்பானிய சிறுவன் கைது
  6. இந்தியாவில் மின்சாரப் பயணிகள் வாகன விற்பனை இரு மடங்காக உயர்வு; டாடா மோட்டார்ஸ் முதலிடம்
  7. இந்தியாவில் ரூ. 3,000 விலைக்குள் அழைப்புகள் மற்றும் இசைக்கான சிறந்த டி.டபிள்யூ.எஸ் (TWS) இயர்பட்ஸ்
  8. டெக்னோ கேமோன் 50 அல்ட்ரா 5ஜி இந்தியாவில் ஜூலை 17-ல் அமேசான் மூலம் அறிமுகமாகிறது, வண்ணங்கள் உறுதி செய்யப்பட்டன
  9. இந்தியாவில் விண்டோஸ் 11 லேப்டாப்பில் பேட்டரி ஆயுளை நீட்டிப்பது எப்படி
  10. ஆசஸ் விவோபுக் 14, விவோபுக் 15 இன்டெல் கோர் சீரிஸ் 3 செயலிகளுடன் புதுப்பிக்கப்பட்டன: விலை, கிடைக்கும் தன்மை
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.