Photo Credit: Weibo/ Technology Digital Black Rice
விவோ ஒய் 70 எஸ் கசிவுகள் மற்றும் டீஸர்களில் தோன்றத் தொடங்கியுள்ளன. மேலும், விவோ இந்த ஸ்மார்ட்போனை விரைவில் அதன் ஒய்-சீரிஸில் சேர்க்கப் போகிறது என்று தெரிகிறது. விவோ, அடுத்த மாதம் எந்த நேரத்திலும் விவோ ஒய் 30-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்த முடியும் என்று சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. இப்போது விவோ ஒய் 70 எஸ்-ன் போஸ்டரை விரைவில் தொடங்க தயாராகி வருவதை நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டீஸரில், இந்த புதிய ஸ்மார்ட்போனில் 5 ஜி ஆதரவு பற்றிய தகவல்களும் வெளிவந்துள்ளன. அதே நேரத்தில் வெய்போவின் மற்றொரு பதிவு விவோ ஒய் 70 எஸ்-ன் நேரடி படங்களை காட்டியது, இதில் மூன்று வெவ்வேறு வண்ண வகைகள் காணப்பட்டுள்ளன.
அதே பதிவு Vivo ஒய் 70 எஸ்-ன் நேரடி படத்தை ஸ்மார்ட்போனின் சில்லறை பெட்டியுடன் பகிர்ந்து கொள்கிறது. ஸ்மார்ட்போன் சீனாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படுவதற்கு மிக நெருக்கமாக இருக்கலாம்.
விவோ ஒய் 70 எஸ்-ல் ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே மற்றும் பின்புறத்தில் டிரிபிள் கேமரா அமைப்பு உள்ளது என்றும் அதிகாரப்பூர்வ தோற்றமுடைய போஸ்டர் கூறுகிறது. இந்த போஸ்டர் விவோ ஒய் 70 எஸ் 4,500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கியது.
சாம்சங் எக்ஸினோஸ் 880 செயலியுடன் விவோ ஒய் 70 எஸ் அறிமுகம் செய்வது குறித்த தகவலும் உள்ளது. இது மாலி-ஜி 75 ஜி.பீ.யைக் கொண்டுள்ளது. சமீபத்தில் வரவிருக்கும் விவோ போன் ஒரு தரப்படுத்தல் வலைத்தளத்தில் காணப்பட்டது. இந்த போனில் அதே செயலி இருப்பதாகக் கூறப்பட்டது.
ஸ்மார்ட்போனை 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மூலம் அறிமுகப்படுத்த முடியும். பெஞ்ச்மார்க் இணையதளத்தில், இந்த போன் முறையே ஒற்றை கோர் மற்றும் மல்டி கோர் சோதனைகளில் 641 மற்றும் 1814 மதிப்பெண்களைப் பெற்றது. விவோ ஒய் 70 எஸ் ஆண்ட்ராய்டு 10-ல் இயங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விவோ ஒய் 70 எஸ் அதன் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு மிக நெருக்கமாக இருப்பதாகத் தெரிகிறது. மேலும், அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை விவோவிடம் இருந்து விரைவில் கேட்கலாம் என்று எதிர்பார்க்கலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்