Photo Credit: Vivo
Vivo Y300 5G இந்தியாவில் வெளியிடப்படும் தேதியை Vivo உறுதிப்படுத்தியுள்ளது. இது குறைந்தது மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கும். Vivo Y300 ஆனது இரட்டை பின்புற கேமரா அலகு கொண்டதாக தெரிகிறது. இது கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட Vivo Y200 செல்போன் மாடலுக்கு அடுத்தபடியாக வெளியாகிறது. இது Vivo V40 Lite செல்போனின் மறுபெயரிடப்பட்ட கைபேசியாக இருக்கலாம். Vivo India ஆனது Vivo Y300 5G இந்தியாவில் நவம்பர் 21 அன்று வெளியிடப்படும் என்று அறிவித்தது. வெளியீட்டு நிகழ்வு மதியம் 12 மணிக்கு தொடங்கும். இது கருப்பு, பச்சை மற்றும் வெள்ளி நிறத்தில் கிடைக்கும். Vivo அதன் இணையதளத்தில் Vivo Y300 5G க்காக பிரத்யேக லேண்டிங் பக்கத்தை உருவாக்கியுள்ளது . இது பின்புறத்தில் செங்குத்து இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. கேமரா சென்சார்கள் மற்றும் எல்இடி ஃபிளாஷ் அமைப்பை கொண்டுள்ளது. இந்தோனேசியாவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமான Vivo V40 Lite போலவே Vivo Y300 5G மாடல் இருக்கிறது. Vivo V40 Lite 5G டைனமிக் பிளாக் மற்றும் டைட்டானியம் சில்வர் வண்ணங்களை ஒத்திருக்கிறது.
8ஜிபி ரேம் 128ஜிபி மெமரி மாடல் Vivo Y300 Plus இப்போது இந்தியாவில் 23,999 ரூபாய் விலையில் கிடைக்கிறது. இது சில்க் க்ரீன் மற்றும் சில்க் பிளாக் வண்ணங்களில் வழங்கப்படுகிறது. Vivo Y300 Plus ஆனது 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.78-இன்ச் முழு-HD (1,080x2,400 பிக்சல்கள்) டிஸ்பிளே கொண்டுள்ளது. இது 8GB LPDDR4X ரேம் மற்றும் 128GB UFS 2.2 மெமரியுடன் 6nm Snapdragon 695 SoC சிப்செட் மூலம் இயங்குகிறது. ரேமை கிட்டத்தட்ட 8ஜிபி வரை அதிகரிக்க முடியும். அதே சமயம் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக மெமரியை 1டிபி வரை விரிவாக்க முடியும்.
கேமராவை பொறுத்தவரையில் Vivo Y300 Plus ஆனது 50-மெகாபிக்சல் முதன்மை சென்சார் கேமரா மற்றும் 2-மெகாபிக்சல் செகண்டரி ஷூட்டரை உள்ளடக்கிய இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது 32 மெகாபிக்சல் முன் கேமராவைக் கொண்டுள்ளது. ஃபோன் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP54 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டுள்ளது. இது 44W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
ப்ளூடூத் 5.1, வை-பை 5, ஜிபிஎஸ், என்ஃஎப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி சப்போர்ட் இருக்கிறது. மேலும் ஹை-ரெஸ் ஆடியோ Hi-Res Audio உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இந்த போனில் ரியர் பிளாஷ் மற்றும் டூயல் கலர் டெம்பரேச்சர் கொண்ட அரோ எல்இடி இடம் பெற்றுள்ளது. இதுவொரு Anti-Shake OIS கேமரா மாடல் ஆகும். இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம். Vivo Y300 5G அடுத்த வாரம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வரும்போது இந்த துல்லியமான விவரக்குறிப்புகளையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்