விவோ வி 19 இன்று முதல் முறையாக இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று முதல் இது அமேசான், Flipkart, நிறுவனத்தின் இ-ஸ்டோர், பிற இ-காமர்ஸ் வலைத்தளங்கள் மற்றும் நாடு முழுவதும் ஆஃப்லைன் கடைகள் மூலம் கிடைக்கும். மேலும், பல தள்ளுபடி சலுகைகள் விவோ வி 19 உடன் வழங்கப்பட்டுள்ளன. இதில் வங்கி தள்ளுபடிகள், ஈஎம்ஐ சலுகைகள் மற்றும் தொலைத்தொடர்பு சலுகைகள் உள்ளன. இப்போதைக்கு, பச்சை மண்டலம் மற்றும் ஆரஞ்சு மண்டலத்தில் விற்பனை தொடங்கும்.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Vivo V19-ன் விலை ரூ.27,990 ஆகும். 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ.31,990 ஆக உள்ளது. இந்த போன் பிளாக் மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கும்.
ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வாடிக்கையாளர்களுக்கான வெளியீட்டு சலுகையில் ஒரு முறை திரை மாற்று சலுகை, ரூ .40,000 மதிப்புள்ள ஜியோ கோல்ட் பாஸ் மற்றும் 12 மாதங்கள் வரை விலை இல்லாத ஈ.எம்.ஐ ஆப்ஷன்கள் ஆகியவை அடங்கும். எச்.டி.எஃப்.சி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கிரெடிட் கார்டு பயனர்களும் இந்த ஸ்மார்ட்போன் வாங்கும்போது 10 சதவீதம் கேஷ்பேக் பெறலாம்.
ஏர்டெல் டபுள் டேட்டா சலுகை, இலவச ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் சந்தா, ஒரு மாதத்திற்கு இலவச ஷா அகாடமி அணுகல், இலவச ஏர்டெல் விங்க் இசை மற்றும் ஏர்டெல் செக்யூர் லைட் சந்தா ஆகிய சலுகைகளையும் விவோ வழங்கியுள்ளது. இந்த சலுகைகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.
மேலும், ஆஃப்லைன் சலுகையானது ஐடிஎஃப்சி வங்கியில் 5 சதவிகித கேஷ்பேக், எச்டிபியிடமிருந்து ஈஎம்ஐ கேஷ்பேக் மற்றும் விவோ வி 19 வாங்கும் வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும்.
டூயல்-சிம் Vivo வி 19, 6.44 இன்ச் எஃப்.எச்.டி + டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். இந்த போன் ஆண்ட்ராய்டு 10 உடன் நிறுவனத்தின் ஃபன்டூச் ஓஎஸ் 10-ல் இயக்கும். போனின் உள்ளே ஸ்னாப்டிராகன் 712 சிப்செட் உள்ளது. 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜுடன் வருகிறது.
இந்த போனில் 32 மெகாபிக்சல் முதன்மை கேமரா கொண்ட இரட்டை செல்பி கேமரா உள்ளது. 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமராவுடன் வருகிறது. போனின் பின்புறத்தில் உள்ள நான்கு கேமராக்களில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா உள்ளது. 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளது.
இணைப்பிற்காக இந்த போனில் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக், புளூடூத் வி 5.0, டூயல் பேண்ட் வைஃபை, ஜி.பி.எஸ் ஆகியவை உள்ளது. போனின் உள்ளே 4,500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது. விவோ வி 19-ன் எடை 186.5 கிராம் ஆகும்.
Is Mi 10 an expensive OnePlus 8 or a budget budget S20 Ultra? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்