விவோ வி19 உலகளாவிய வேரியண்ட் அறிமுகமானது. விவோ வி19 முதலில் மார்ச் 26 அன்று இந்தியாவில் அறிமுகமாக இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளியீடு தாமதமானது. விவோ வி19, க்ளீம் பிளாக் மற்றும் ஸ்லீக் சில்வர் கலர் ஆப்ஷன்களிலும், 128 ஜிபி / 256 ஜிபி ஆகிய இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களிலும் வழங்கப்படும்.
புதிய Vivo V19 ஸ்மார்ட்போனின் விலையை விவோ குறிப்பிடவில்லை. "விவரங்கள் பிராந்தியத்தின் அடிப்படையில் மாறுபடலாம். மேலும் தகவலுக்கு உள்ளூர் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்" என்று நிறுவனம் கூறியுள்ளது.
விவோ இந்தியா, மறுபுறம், தொலைபேசியை தங்கள் போர்ட்டலில் வரவிருக்கும் கைபேசியாக பட்டியலிடுகிறது. நாட்டில் கொரோனா வைரஸ் நிலைமை மேம்பட்டதும் நிறுவனம் ஸ்மார்ட்போன் குறித்த கூடுதல் தகவல்களை வெளியிடும் என்று விவோ இந்தியா தனது ட்விட்டர் கணக்கு மூலம் தெரிவித்துள்ளது.
Vivo வி19 டூயல்-சிம் (நானோ) ஸ்லாடைக் கொண்டுள்ளது. இது 6.44 இன்ச் முழு எச்டி + (1080x2400) சூப்பர் அமோலேட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இதில் கைரேகை ஸ்கேனர் உள்ளது. இந்த போன், ஃபன்டூச் ஓஎஸ் 10 உடன் ஆண்ட்ராய்டு 10-ல் இயக்குகிறது. போனில் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 SoC உள்ளது. இது 8 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
போனின் முன் பேனலில், பெரிய ஹோல்-பஞ்சில் 32 மெகாபிக்சல் பிரதான செல்பி கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர் உள்ளன. பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பில் 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஆங்கிள் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா ஆகியவை அடங்கும். பின்புறத்தில் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டரும் உள்ளது.
விவோ வி 19, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி ஆகிய இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்டுகளில் வரும். இவை இரண்டும் பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக விரிவாக்கம் செய்யலாம். மற்ற விவோ போன்கள் போன்ற இதர விவரங்கள் உள்ளன. போனில், 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரவுடன், 4,500 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. 33W விவோ ஃப்ளாஷ் சார்ஜ் 2.0 தொழில்நுட்பம் 30 நிமிடங்களில் போனை 54 சதவீதம் வரை சார்ஜ் செய்யும். விவோ வி 19, 159.64x75.04x8.5 மிமீ அளவு மற்றும் 186.5 கிராம் எடை கொண்டது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்