Vivo S1 Pro கடந்த வாரம் பிலிப்பைன்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏற்கனவே இந்தியாவுக்கு வரவுள்ளது என்று வதந்தி பரவியுள்ளது. சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் இப்போது ஸ்மார்ட்போனை ரஷ்யாவிலும் அறிமுகப்படுத்தியுள்ளார். ஆனால், முற்றிலும் மாறுபட்ட மாடல் பெயருடன். Vivo V17 என Vivo S1 Pro-வை ரஷ்யாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. முக்கிய வன்பொருள் மற்றும் விவரக்குறிப்புகள் அப்படியே இருக்கின்றன. ஆனால், விவோ அதை அதன் V-தொடர் ஸ்மார்ட்போன்களில் சேர்த்துள்ளது. ரஷ்யாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Vivo V17 ஒரு dewdrop notch மற்றும் பின்புறத்தில் diamond-shaped கேமரா தொகுதி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
Vivo V17-ன் விலை:
Vivo V17-ன் விலை RUB 22,990 (சுமார் ரூ .25,900)-யாக உள்ளது. ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மட்டுமே உள்ளது. விவோ ரஷ்யாவில் Cloudy Blue மற்றும் Blue Fog என இரண்டு வண்ணங்களில் Vivo V17-ஐ விற்பனை செய்கிறது. விவோ ஒரு சுவாரஸ்யமான சலுகையையும் இயக்கி வருகிறது. நீங்கள் Vivo V17-ஐ டிசம்பர் 5-க்கு முன்பு முன்பதிவு செய்தால் Vivo Y11-ஐ இலவசமாகக் கொடுக்கிறது.
Vivo V1 அடிப்படையாகக் கொண்ட Vivo S1 Pro பிலிப்பைன்ஸில் PHP 15,999 (சுமார் ரூ. 22,500)-க்கு கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது.
Vivo V17-ன் விவரக்குறிப்புகள்:
Vivo V17, 6.38-inch full-HD+ (1080x2340 pixels) Super AMOLED FullView டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது screen-to-body ratio of 90 சதவிகிதம் மற்றும் 19.5:9 aspect ratio-வைக் கொண்டுள்ளது. Vivo V17, in-display fingerprint scanner-ஐக் கொண்டுள்ளது. பிலிப்பைன்ஸில் அறிமுகப்படுத்தப்பட்ட Vivo S1 Pro-வைப் போலவே, தொகுக்கப்பட்ட 8GB RAM உடன் octa-core Qualcomm Snapdragon 665 SoC-ஐ V17 கொண்டுள்ளது.
பின்புறத்தில், Vivo V17 diamond-shaped quad rear கேமரா அமைப்பில், f/1.8 aperture உடன் 48-megapixel முதன்மை சென்சார், f/2.2 aperture மற்றும் 108-degree field of view (FoV) உடன் 8-megapixel ultra-wide-angle கேமராவைக் கொண்டுள்ளது. இது 2-megapixel macro கேமரா மற்றும் 2-megapixel sensor சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்பிகளுக்காக, Vivo V17 ஸ்மார்ட்போனில் 32-megapixel செல்பி கேமரா சென்சார் உள்ளது.
128 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜ் உள்ளது. இது microSD card slot பயன்படுத்தி 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடியது. V17 தொடர்பு இல்லாத பேமெண்டுகளுக்கான NFC-யையும் கொண்டுள்ளது மற்றும் இரட்டை வேக சார்ஜிற்கான ஆதரவையும் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனில் Bluetooth 5.0, dual 4G VoLTE, dual-band Wi-Fi போன்றவை உள்ளன. இது USB Type-C port மற்றும் 4,500mAh பேட்டரியில் பேக் செய்கிறது. Vivo V17, Android 9 Pie அடிப்படையிலான FuntouchOS 9.2-ஐ இயக்குகிறது.
Vivo V17, Vivo S1 Proவை அடிப்படையாகக் கொண்டது. இது விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. விவோ இந்தியா ரஷ்யாவில் செய்ததைப் போலவே மறுபெயரிடும் தந்திரத்தையும் பயன்படுத்துகிறதா என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்