சஸ்பென்ஸ் நிறைந்த அறிமுக விழா அழைப்பிதழை தொடர்ந்து விவோ தற்போது விவோ வி15 ப்ரோ இந்தியாவில் அறிமுகமாக போவதாக தற்போது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள யூடியுப் டிஸ்சரில் விவோவின் இந்த புதிய தயாரிப்பு உலகத்தின் முதல் 32 மெகா பிக்சல் கொண்ட பாப் அப் செல்ஃபியை கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த வீடியோவில் போனின் பின்புறத்தில் அமைந்திருக்கும் மூன்று கேமராக்களும் செயற்கை நுண்ணறிவு கொண்டு இயங்குவதுபோல் அமைந்திருக்கிறது.
நீல நிறத்தில் இருக்கும் இந்த புதிய வி15 வகை ஸ்மார்ட்போன் கிரேடியன்ட் ஃப்னிஷிங்கை கொண்டுள்ள நிலையில் வரும் பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள் முறையாக அறிமுகப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
18 வினாடி டிஸ்சரான இந்த அறிமுக வீடியோவில் தனது நிறுவனத்தின் பிராண்ட் தூதரான அமீர்கான் இந்த புதிய தயாரிப்பை பயன்படுத்துவது போன்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே பாப் ஆப் செஃபி கேமரா பல எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இந்த போன் ரூ.25,990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்