இந்திய சந்தையில் பல முக்கிய நிறுவனங்கள் தங்களது போன்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது விவோ சார்பில், விவோ வி15 ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. இம்மாத தொடக்கத்தில் தென்கிழக்கு ஆசிய நாடு சந்தைகளில் வெளியான இந்த விவோ வி15 ஸ்மார்ட்போன் பல மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.
விவோ வி15 விலை மற்றும் அறிமுக ஆஃபர்கள்:
இந்தியாவில் ரூ.23,990க்கு இந்த விவோ வி15 ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த தயாரிப்பு ஃப்ரோசன் பிளாக், கிளாமர் ரெட் மற்றும் ராயல் புளூ ஆகிய நிறங்களில் வெளியாக உள்ளன. இந்தியாவில் வெளியாகியுள்ள ஸ்மார்ட்போன்களில் விவோ வி15 ஸ்மார்ட்போன் மட்டுமே 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பு வசதியைப் பெற்றுள்ளது.
இப்படி பல முன்னணி வசதிகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு வரும் மார்ச் 25 ஆம் தேதி முதல் முன்பதிவுக்கு வரவுள்ளதாகவும் ஏப்ரல் 1 முதல் விற்பனை துவங்கப்படும் எனவும் விவோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த விவோ வி15 ஸ்மார்ட்போன் விவோ இந்தியா இ-விற்பனை தளம், அமேசான், ஃபிளிப்கார்ட், பேடிஎம், டாடா CLiQ மற்றும் ஆஃப்லைன் கடைகளிலும் விற்பனையாகும்.
அறிமுக சலுகையாக விவோ வி15 போன்களை வாங்குபவர்களுக்கு வாங்கிய பிறகு ஸ்க்ரீன் ஏதாவது பாதிப்படைந்தால் ஒரு முறை முழுமையாக மாற்றி கொடுக்கப்படும். அதுமட்டுமின்றி 15 மாதத்திற்குக் கூடுதல் கட்டணமில்லா தவணைத் திட்ட வசதி, எக்ஸ்சேஞ்ச் ஆஃபர், 10,000 ரூபாய் மதிப்பிலான ஜியோ ஆஃபர்கள் மற்றும் பல வங்கிகளின் ஆஃபர்கள் இந்த போனுடன் வழங்கப்பட உள்ளன.
விவோ வி15 அமைப்புகள்:
டூயல் நேனோ சிம் மற்றும் 6.53 முழு ஹெச்டி திரை கொண்டுள்ள இந்த விவோ வி15 ஸ்மார்ட்போன், கோர்னிங் கோரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பைப் பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 ஃபன்டச் ஓஎஸ்-ஐ பெற்றுள்ளது. இதில் ஆக்டாகோர் மீடியா டெக் ஹூலியோ பி70 SoC மற்றும் 6ஜிபி ரேம் வசதிகள் இருக்கின்றன. பின்புறத்தில் மூன்று கேமராக்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 12/8/5 மெகா பிக்சல் சென்சார்களை கொண்டுள்ளது. முன் புறத்தில் செல்ஃபிகளுக்காக 32 மெகா பிக்சல் பாப்-ஆப் கேமரா சென்சாரையும் இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது. ஃபிங்கர் பிரின்ட் சென்சாரை பின்புறத்தில் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 64ஜிபி சேமிப்பு வசதியுடன் வருகிறது. இதுமட்டுமின்றி விவோ வி15 ஸ்மார்ட்போன் 4,000mAh பேட்டரி வசதியையும் பெற்றுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்