மலிவு விலையில் தரமான 5G Mobile இறக்கப்போகும் Vivo

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 6 ஆகஸ்ட் 2024 14:46 IST
ஹைலைட்ஸ்
  • MediaTek Dimensity 7200 சிப்செட் வசதியுடன் வருகிறது
  • Mali-G57 MP2 GPU கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது
  • இந்த ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 6300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது

Photo Credit: Flipkart

விவோ நிறுவனம் தனது புதிய Vivo T3 Lite 5G ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதனை பிளிப்கார்ட் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. வரும் வாரங்களில் Vivo T3 Lite 5G போன் இந்தியாவில் அறிமுகமாகும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. ஆன்லைனில் வெளியான இந்த விவோ போனின் சிறப்பு அம்சங்களை இப்போது பார்க்கலாம். 

தரமான MediaTek Dimensity 7200 சிப்செட் வசதியுடன் இந்த Vivo T3 Lite 5G ஸ்மார்ட்போன் வருகிறது. இதனால் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் Mali-G57 MP2 GPU கிராபிக்ஸ் கார்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 14 மூலம் இயங்குகிறது.

ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். Vivo T3 Lite 5G  4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக மெமரி நீட்டிப்பு செய்யலாம். மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளது. 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. இதனால் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உள்ளது.

Flipkart microsite கருத்துபடி , Vivo T3 Lite 5G ஆனது "மின்னல் வேக செயலி" மூலம் இயக்கப்படும். இது இந்தியாவின் மலிவு விலை 5G ஸ்மார்ட்போன் என்று நிறுவனத்தால் கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் Sony AI கேமராவும் இருக்கும். 5000எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பேட்டரியை சார்ஜ் செய்ய 44 வாட்ஸ் ஃபாஸட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

Advertisement

Vivo T3 Lite 5G யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், வைஃபை, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு வசதிகள் உள்ளது. ரூ.12,000 பட்ஜெட்டில் இந்த விவோ போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vivo T3 Lite 5G, Vivo, Vivo T3 Lite, Vivo mobile

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டிசைனிங் கத்துக்கணுமா? அடோப் டூல்ஸ் இப்போ ஃப்ரீ! இந்திய மாணவர்களுக்கு 'அடோப்' தந்த செம்ம கிப்ட்
  2. WhatsApp குரூப்ல இப்போதான் சேர்ந்தீங்களா? கவலைப்படாதீங்க! பழைய 100 மெசேஜ்களை இனி நீங்க படிக்கலாம்
  3. ஜியோ ஹாட்ஸ்டார் சாட்ஜிபிடி வேற லெவல் என்டர்டைன்மென்ட்! இனி நம்ம ஊர் மொழியிலேயே பேசி படங்களைத் தேடலாம்
  4. சாட்ஜிபிடி இப்போ நம்ம காலேஜுக்குள்ளயே வந்துடுச்சு! 1 லட்சம் மாணவர்களுக்கு ஸ்பெஷல் கோர்ஸ்.. ஓபன் ஏஐ-யின் அதிரடி பிளான்
  5. டெல்லியில் 1,100-க்கும் மேற்பட்ட போலி நதிங், CMF பொருட்கள் பறிமுதல்! கூகுள் போல நதிங் நிறுவனமும் எச்சரிக்கை - முழு விவரம்
  6. இனி இன்டர்நெட் வேகம் வேற லெவல்ல இருக்கும்! கடலுக்கு அடியில் கூகுள் போடும் புதிய கேபிள் ரூட்கள்
  7. கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஜியோவின் மெகா கிப்ட்! ரூ.1457 பெனிபிட்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே
  8. Pixel 10a வந்தாச்சு மக்களே! தரமான கேமரா, வேற லெவல் பேட்டரி.. ஐபோனுக்கு செம்ம டஃப் கொடுக்கும் போலயே
  9. இனி டேட்டா கேபிள் தேவையில்லை! Pixel 9 போன் வச்சிருக்கீங்களா? ஐபோனுக்கு அசால்ட்டா ஃபைல் அனுப்பலாம்
  10. மே 19-ல் கூகுள் போடப்போகும் மெகா பிளான்! Android 17 முதல் Gemini AI வரை - முழு விபரம் இதோ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.