விவோ எஸ்6 5ஜி, மார்ச் 31 ஆம் தேதி சீனாவில் அறிவிக்கப்படும் என்று நிறுவனம் தனது வெய்போ பக்கம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. இது விவோ எஸ்6 5ஜிக்கான மார்ச் 31 தேதி மற்றும் இரவு 7:30 நேரம் ஆகியவற்றைக் குறிக்கும் போஸ்டரைப் பகிர்ந்துள்ளது. கடந்த ஆண்டு பிற்பகுதியில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ எஸ்5-க்கு அடுத்தபடியாக, இந்த போன் இருக்கும். விவரக்குறிப்புகள் அடிப்படையில் விவோ எஸ்6 5ஜி குறித்து நிறைய தகவல்கள் இல்லை என்றாலும், இந்தபோன் செல்பி மீது கவனம் செலுத்துகிறது மற்றும் நிறுவனம் வெய்போவில் ஒரு டீஸர் வீடியோவை #5ஜி செல்பி ஃபோன் விவோ எஸ்6 உடன் பகிர்ந்து கொண்டது.
மார்ச் 31 ஆம் தேதி இரவு 7:30 மணிக்கு CST-யில் நடைபெறும் மாநாட்டிற்கு முன்னதாக விவோ தனது வெய்போ கணக்கு படத்தை விவோ எஸ்6 5ஜிக்கு புதுப்பித்துள்ளது. இது போஸ்டரில் இரவு 7:30 மணி என்று பரிந்துரைத்தது. இந்த போஸ்டர், வேறு எதையும் வெளிப்படுத்தவில்லை, ஆனால் அதில் ஒரு ‘எஸ்' வடிவத்தைக் கொண்டுள்ளது, இது போனின் விளிம்புகளைப் போல தோற்றமளிக்கிறது, ஆனால் எஸ்-சீரிஸ் பிராண்டிங்கைக் குறிக்கும். அறிவிப்புக்கான ஆன்லைன் நிகழ்வை நடத்துமா என்பதை விவோ உறுதிப்படுத்தவில்லை.
நேரடி சூரிய ஒளி காரணமாக மங்கலான ஒருவரின் ஒரு படத்தையும் வெய்போவில் நிறுவனம் பகிர்ந்துள்ளது, மேலும் இது சீன நடிகர் லியு ஹூரன் (Liu Haoran) என்று ரசிகர்கள் சந்தேகிக்கின்றனர். அவர் விவோ எஸ்6 5ஜிக்கான தூதர் அல்லது அவர் மாநாட்டில் கலந்துகொள்வார் என்று இது பரிந்துரைக்கலாம்.
முன்னர் நிறுவனம் பகிர்ந்த டீஸர் வீடியோ, “நீங்கள் விரைவான வேகத்திற்கு தயாரா?”, “வலுவான செயல்திறன்” மற்றும் “இரட்டை முறை 5ஜி” (மொழிபெயர்க்கப்பட்டுள்ளது) என்று கூறுகிறது. எஸ்.ஏ மற்றும் என்எஸ்ஏ நெட்வொர்க்குகளில் 5ஜிக்கு போனின் ஆதரவு இருக்கும் என்பதை இது குறிக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்