விரைவில் வரவிருக்கும் Vivo S5!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 30 அக்டோபர் 2019 16:00 IST
ஹைலைட்ஸ்
  • Vivo S5 டீஸர் வீடியோ, பெயரை மட்டும் உறுதிபடுத்துகிறது
  • வெளியீட்டு தேதி இன்னும் அறியப்படவில்லை, ஆனால் அது விரைவில் வரும்
  • சமீபத்தில் ஒரு சீன பாடகரின் ஊடக நேர்காணலின் மூலம் கசிந்துள்ளது

Vivo S5 விரைவில் சீனாவில் அறிமுகமாகவுள்ளது

Vivo S5 போனின் அறிமுகத்தை Vivo கிண்டல் செய்யத் தொடங்கியுள்ளது. இந்த டீஸர் போனின் பெயரையும் அதன் உடனடி வருகையையும் உறுதிப்படுத்துகிறது. இந்த போன் மே மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Vivo S தொடரின் ஒரு பகுதியாக இருக்கும். இந்த தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் தொலைபேசிகள் Vivo S1 மற்றும் Vivo S1 Pro ஆகும். Vivo S1 உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இது சீனா வேரியண்டில் காணப்படும் pop-up செல்பி கேமராவுக்கு பதிலாக, waterdrop-style notch உடன் வந்தது.

Vivo S5 பற்றிய பதிவுகளை நிறுவனம் வெய்போவுக்கு அழைத்துச் சென்றுள்ளது. Vivo ஒரு வீடியோ மூலம் Vivo S5 வருகையை கிண்டல் செய்துள்ளது. இது வரவிருக்கும் Vivo 'S' தொடர் தொலைபேசியின் பெயரை உறுதிப்படுத்துகிறது. மேலும், தொலைபேசி ஒரு நல்ல அழகியலைக் கொண்டிருக்கும் என்பதை வலியுறுத்துகிறது. தொலைபேசியின் வெளியீட்டு தேதியும் தெரியவில்லை. ஆனால், இப்போது டீஸர்கள் வரத் தொடங்கியுள்ளதால், அது வெகு தொலைவில் இல்லை என்று தெரிகிறது.

Vivo S5 சீனப் பாடகர் காய் ஜுகுன் (Cai Xukun) மூலம் ஒரு ஊடக நேர்காணலில் கசிந்ததாகக் கூறப்படுகிறது. தொலைபேசியை அவர் கையில் வைத்திருப்பதால் தொலைபேசியின் பின்புறத்தைக் காணலாம். மேலும், இது diamond-shaped rear கேமரா தொகுதியைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. கேமரா தொகுதியில் laser autofocus sensor மற்றும் LED flash ஆகியவை triple rear கேமரா அமைப்போடு அடங்கும். ஒப்பிடுகையில், Vivo S1 மற்றும் Vivo S1 Pro தொலைபேசிகள் பின்புற கேமரா அமைப்புகளை செங்குத்தாக சீரமைக்கின்றன. Vivo S1 மற்றும் Vivo S1 Pro-வைப் போலவே, Vivo S5-ல் gradient back panel finish காணப்படுகிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vivo S5, Vivo
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஆப்பிளின் அதிக விலையுள்ள மடிக்க முடியாத போனாக ஐபோன் 18 புரோ மேக்ஸ் வரலாம்: கசிவு தகவல்!
  2. விரிவாக்கப்பட்ட தரவு பரிமாற்ற ஆதரவுடன் ஐபோனில் இருந்து மாறுவதை எளிதாக்குகிறது 'ஆண்ட்ராய்டு 17'
  3. 2026-இல் உங்கள் ஏர்டெல் இ-சிம்மை (Airtel eSIM) செயல்படுத்துவது எப்படி: படிப்படியான வழிகாட்டி
  4. இந்தியாவில் அறிமுகமாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக 'ஒன்பிளஸ் N6x' பேட்டரி திறன் வெளிப்படை
  5. வாட்ஸ்அப் ஐஓஎஸ் தளத்தில் புதிய உருண்டையான செய்தி குமிழி வடிவமைப்பை அறிமுகப்படுத்துகிறது: அறிக்கை
  6. ஆப்பிள் ஹெல்த், மருத்துவப் பதிவுகளுடன் தனிப்பயன் பதில் தர ஓபன்ஏஐ 'சாட்ஜிபிடி ஹெல்த்' அறிமுகம்!
  7. iQOO Z11 Lite 5G vs Moto G37 Power vs Oppo K14x 5G: இந்தியாவில் விலை, அம்சங்கள் ஒப்பீடு
  8. 50-மெகாபிக்சல் கேமரா, 6,500mAh பேட்டரியுடன் iQOO Z11 Lite இந்தியாவில் அறிமுகம்: விலை, அம்சங்கள்
  9. மோட்டோ பேட் 70 ஆகஸ்ட் 9ல் இந்தியாவில் அறிமுகம்; டைமன்சிட்டி 6400, 10,200mAh பேட்டரியுடன் வருகிறது!
  10. வாட்ஸ்அப் இருபடிச் சரிபார்ப்பு(Two-Step Verification) PINக்கு பதிலாக வலுவான பாஸ்வேர்டை அறிமுகப்படுத்தக்கூடும்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.