இந்தியாவில் நாளை வெளியாகிறது Vivo S1 Pro!

இந்தியாவில் நாளை வெளியாகிறது Vivo S1 Pro!

Vivo S1 Pro-வில் 32 மெகாபிக்சல் முன் கேமரா பொருத்தப்பட்டிருக்கும்

ஹைலைட்ஸ்
  • Vivo S1 Pro வைர வடிவிலான தொகுதியில் குவாட் ரியர் கேமராவை கொண்டுள்ளது
  • இந்த போன் ஏற்கனவே இரண்டு ஆசிய சந்தைகளில் அதிகாரப்பூர்வமாக சென்றுள்ளது
  • Vivo S1 Pro-வின் உலகளாவிய பதிப்பு Snapdragon 665-ஐ தொகுக்கிறது
விளம்பரம்

விவோ, இந்தியாவில் Vivo S1 Pro போனை நாளை அறிமுகம் செய்ய உள்ளது. அதிகாரப்பூர்வ டீஸர்களின் கூற்றுப்படி, Vivo S1 Pro குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டு வைர வடிவிலான தொகுதியில் வைக்கப்படும். Vivo S1 Pro-வில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா இடம்பெறும் என்று சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளார். மேலும், நிறுவனம் அதன் மூன்று கலர் ஆப்ஷன்களில் வரவிருக்கும் போனின் ஆரம்ப காட்சியை எங்களுக்கு வழங்கியுள்ளது. அவற்றில் இரண்டு, glossy finish உடன் நுட்பமான gradient வடிவமைப்பை வெளிப்படுத்துகின்றன.

Vivo S1 Pro, 48 மெகாபிக்சல் முதன்மை கேமராவை பேக் செய்யும் என்றும், அதற்கு wide-angle snapper மற்றும் super macro கேமரா உதவும் என்றும் அதிகாரப்பூர்வ விவோ இந்தியா வலைத்தளம் குறிப்பிடுகிறது. முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்ஃபி shooter, waterdrop notch-ல் வைக்கப்படும். அதன் இண்டர்னல் விவரக்குறிப்புகள் தொடர்பான பிற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், பிலிப்பைன்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து போனைப் பற்றி எங்களுக்கு ஏற்கனவே தெரியும். ஆனால் இந்திய சந்தையைப் பொறுத்தவரை, விவோ ஒரு புதிய நீல கலர் ஆப்ஷனையும் கொண்டு வருகிறது.


இந்தியாவில் Vivo S1 Pro-வின் விலை (எதிர்பார்க்கப்படுபவை)

இந்தியாவில் Vivo S1 Pro-வின் விலை இப்போது ஒரு மர்மமாகவே உள்ளது. மேலும், அதன் விலை தொடர்பாக நம்பகமான கசிவுகளை நாம் இன்னும் காணவில்லை. ஆனால், போனின் 8GB RAM + 128GB வேரியண்ட் பிலிப்பைன்ஸில் PHP 15,999 (சுமார் ரூ. 22,500) ஆகும். இந்தியாவில் அதன் விலை எவ்வளவு என்ற யோசனையை வழங்குகிறது. அதிகாரப்பூர்வ விவரங்களை நாளை பெறுவோம்.


Vivo S1 Pro-வின் விவரக்குறிப்புகள்:

விவரக்குறிப்புகளை பொறுத்தவரை, Vivo S1 Pro, 19.5:9 aspect ratio மற்றும் waterdrop notch உடன் 6.39-inch full-HD+ (1080 x 2340 pixels) Super AMOLED டிஸ்பிளேவை பேக் செய்கிறது. இந்த போன் 8GB RAM மற்றும் 128GB இண்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டு octa-core Qualcomm Snapdragon 665 processor-ஆல் இயக்கப்படுகிறது. இந்த போன் Funtouch OS 9.2 உடன் Android Pie-ல் இயங்குகிறது. 

Vivo S1 Pro-வின் குவாட் ரியர் கேமரா அமைப்பில் 8-megapixel wide-angle snapper, 2-megapixel macro கேமரா மற்றும் 2-megapixel portrait lens உதவியோடு f/1.8 lens உடன் 48-megapixel shooter சிறப்பிக்கப்படுகிறது. முன்புறத்த்இல், செல்ஃபி மற்றும் வீடியோ காலுக்கு f/2.0 aperture உடன் 32-megapixel கேமரா உள்ளது. கேமரா அம்சங்களில் HDR, portrait framing மற்றும் palm capture ஆகியவை அடங்கும். இது 4,500mAh பேட்டரியுடன் வருகிறது, ஆனால் ஃபாஸ்ட் சார்ஜிங் பற்றி எந்த தெளிவும் இல்லை.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vivo, Vivo S1 Pro, Vivo S1 Pro Specifications
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »