Vivo S1 Pro ஜனவரி 4-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகவுள்ளது என்று விவோ தனது சமூக ஊடகத்தில் வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டது. தனித்தனியாக, அமேசான் இந்தியா தனது இணையதளத்தில் ஸ்மார்ட்போனுக்கான டீஸரை வெளியிட்டது. இந்த ஸ்மார்ட்போனின் உலகளாவிய வேரியண்ட் கடந்த மாதம் பிலிப்பைன்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இந்த போன் விரைவில் இந்தியாவுக்கு வரும். Vivo S1 Pro-வின் வருகையை கிண்டல் செய்ய Amazon.in ஒரு பிரத்யேக பக்கத்தை அமைத்துள்ளது. மேலும், இது தொடங்கும்போது ஈ-காமர்ஸ் தளத்திலும் கிடைக்கும். Vivo S1 Pro 48 மெகாபிக்சல் பிரதான சென்சாருடன், பின்புறத்தில் வைர வடிவ குவாட் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று டீஸர் அறிவுறுத்துகிறது.
குறிப்பிட்டுள்ளபடி, Vivo இன்று S1 Pro ஸ்மார்ட்போனை இந்தியாவில் ஜனவரி 4-ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளதாக ட்விட்டரில் வெளிப்படுத்தியது. வெளியீட்டு தேதி நிறுவனத்தின் ட்விட்டர் ப்ரோஃபைல் தலைப்பு படத்திலும், நிறுவனத்தின் வலைத்தளத்தின் விளம்பர பக்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. தனித்தனியாக, போனின் மைக்ரோசைட் அமேசானில் தோன்றியது. Vivo S1 Pro-வை விரைவில் இந்தியாவில் விற்பனை செய்யும் இ-சில்லறை விற்பனையாளர்களில் ஒருவராக இது இருக்கும் என்று இ-சில்லறை விற்பனையாளரின் டீஸர் பக்கம் உறுதிப்படுத்தியுள்ளது. போனின் பின்புறத்தில் வைர வடிவ AI குவாட் கேமரா அமைப்பை இந்தப் டீஸர் பக்கம் வெளிப்படுத்துகிறது. மேலும், Vivo S1 Pro, 48 மெகாபிக்சல் சென்சார் கொண்டிருக்கும் என்று கிண்டல் செய்கிறது. போனில் AI super-wide கேமரா மற்றும் AI macro கேமரா இருக்கும் என்றும் கிண்டல் செய்கிறது. முன்புறத்தில், 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவையும் டீஸர் பக்கம் பரிந்துரைக்கிறது. இது தவிர, அமேசான் பக்கம் வெளிப்படுத்தும் விஷயங்கள் வேறு எதுவும் இல்லை. ஆனால், பயனர்கள் தங்கள் ஆர்வத்தை பதிவு செய்ய ‘Notify Me' பொத்தான் நேரலைக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய வேரியண்ட், பிலிப்பைன்ஸ் வேரியண்ட்டுக்கு இணையானதாக இருந்தால், அது முன்புறத்தில் waterdrop-notch, in-display fingerprint சென்சார் மற்றும் gradient back panel finish ஆகியவற்றைக் கொண்டிருக்கும். முக்கிய விவரக்குறிப்புகளில் 6.38-inch full-HD+ டிஸ்பிளே, octa-core Snapdragon 665 SoC, 8GB RAM, 128GB ஸ்டோரேஜ் மற்றும் 4,500mAh பேட்டரி ஆகியவை அடங்கும். Vivo S1 Pro பிலிப்பைன் வேரியண்ட்டின் விலை PHP 15,999 (சுமார் ரூ. 22,500) மற்றும் இந்திய வேரியண்ட்டின் விலை அதே வரம்பில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போன் பிலிப்பைன்ஸில் Fancy Sky மற்றும் Knight Black கலர் ஆப்ஷன்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவுக்கும் அதே ஆப்ஷன்கள் கிடைக்குமா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
நினைவுகூர, Vivo S1 Pro முதன்முதலில் சீனாவில் மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இந்த மாடல் முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதில், வைர வடிவ பின்புற கேமரா தொகுதியும் இல்லை. அமேசான் டீஸரை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவில் உலகளாவிய வேரியண்ட்டை அறிமுகம் செய்வதைப் பார்ப்போம், சீனா வேரியண்ட் அல்ல.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்