விவோ தயாரிப்புகளில் மிகவும் எதிர்பார்கப்பட்ட விவோ எஸ் 1, தற்போது அறிமுகமாகியுள்ளது. நாட்ச் அமைப்பில்லாத இந்த ஸ்மார்ட்போன் பாப்-அப் செல்ஃபி, முழு ஹச்டி திரை மற்றும் ஹூலியோ P70 SoC போன்ற பல அமைப்புகளைக் கொண்டுள்ளது.
மேலும் அந்நிறுவனம் சார்பில் நேக்ஸ் சீரிஸ், X சீரிஸ், Z சீரிஸ், Y சீரிஸ் மற்றும் U சீரிஸ் போன்ற பல தயாரிப்புகள், இந்த போனுடன் சேர்ந்து வெளியாகும். இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்ளில் வெளியாகும் எனத் தெரிகிறது.
விவோ எஸ்1 விலை:
விவோ நிறுவனம் சார்பில் இந்த எஸ்1 தயாரிப்புக்கு ரூ.24,500 வரை விலை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்கப்படுகிறது. 6ஜிபி ரேம்/ 128 சேமிப்பு வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் நீலம் மற்றும் பீச் பிங் போன்ற நிறங்களில் வெளியாக உள்ளது.
மேலும் விவோ எஸ்1 ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி காலை சரியாக 10 மணி அளவில் துவங்க உள்ளது. அதன் பின்னர் விற்பனையை ஏப்ரல் 3 ஆம் தேதி துவங்குகிறது.
இந்தியாவில் இந்த தயாரிப்பின் வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் சியோமி மற்றும் ரியல்மி போன்ற போன்களுக்குக் கிடைத்த வரவேற்பு இந்த போனுக்கும் கிடைக்கும் என எதிர்பார்கப்படுகிறது.
விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் அமைப்புகள்:
ஃபன்டச் ஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு 9 பையில் இயங்கும் இந்த விவோ எஸ்1 ஸ்மார்ட்போன், 6.53 இஞ்ச் முழு ஹெச்டி திரையைக் கொண்டுள்ளது. மேலும் இந்த தயாரிப்பு மீடியா டெக் ஹீலியோ P70 SoC மற்றும் 6ஜிபி ரேம் வசதிகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கேமரா வசதிகளைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் மூன்று கேமராக்களை கொண்டுள்ளது. 12/8/5 மெகா பிக்சல் கேமராக்களை கொண்டுள்ள நிலையில், சிறந்த செல்ஃபிகளுக்காக 25 மெகா பிக்சல் கேமராவை எஸ் 1 கொண்டுள்ளது.
மற்ற சில முக்கிய அம்சங்களாக 3,940mAh பேட்டரி, பின்புறத்தில் ஃபிங்கர் பிரின்ட், புளூடூத் கனெக்டிவிட்டி போன்ற பல சிறப்பம்சங்களை இந்த போன் பெற்றிருக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்