உங்கள் காலெண்டரில் தேதியை குறித்துக்கொள்ளுங்கள் என இந்த சீன நிறுவனம், தன் புதிய ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுக தேதியை அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் அறிவிப்பின்படி, 'விவோ S1' ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 7 அன்று இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. விவோ நிறுவனத்தின் இந்த புதிய S-தொடர் ஸ்மார்ட்போன் சில நாட்கள் முன்புதான் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்திருந்தது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ P65 எஸ் ஓ சி ப்ராசஸர், 128GB சேமிப்பு அளவு, 4,500mAh பேட்டரி போன்ற சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
விவோ இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் இந்த ஸ்மார்ட்போன் எந்த விலையில் அறிமுகமாகிறது, எப்போது விற்பனைக்கு வரவுள்ளது என எந்த ஒரு தகவலும் இடம்பெறவில்லை. இந்த ஸ்மார்ட்போன், ஆகஸ்ட் 7 அன்று இந்தியாவில் அறிமுகமாகும் என மட்டுமே குறிப்பிட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் விலை குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை என்றாலும், இந்தோனேசியாவில் அறிமுகமான விலையிலேயேதான் இந்தியாவிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இந்தோனேசியாவில் அறிமுகமான இந்த 'விவோ S1' ஸ்மார்ட்போன் 3,599,000 இந்தோனேசிய ரூபாய் (17,800 இந்திய ரூபாய்) என்ற விலையில் அறிமுகமாகியிருந்தது. இந்த ஸ்மார்ட்போன் 4GB RAM + 128GB சேமிப்பு அளவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பச்சை (Cosmic Green0 மற்றும் நீலம் (Skyline Blue) என இரு வண்ணங்களில் அறிமுகமானது.
முன்னதாக இந்த ஸ்மார்ட்போன், விவோ S1 Pro ஸ்மார்ட்போனுடன் மார்ச் மாதமே சீனாவில் அறிமுகமாகியிருந்தது.
'விவோ S1' ஸ்மார்ட்போன் ஃபன்-டச் ஓ.எஸ் 9 (Funtouch OS 9) உடன், ஆண்ட்ராய்டு 9 பை அமைப்பு கொண்டு செயல்படுகிறது. இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 6.38 FHD+ திரை (1080x2340 பிக்சல்கள்), வாட்டர்-டிராப் ஸ்டைல் நாட்ச் திரை பொன்ற திரை அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ P65 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
3 பின்புற கேமராக்களைக் கொண்டுள்ள 'விவோ S1' ஸ்மார்ட்போன், 16 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அளவிலான வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் அளவிலான மூன்றாவது கேமராவையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 32 மெகாபிக்சல் அளவிலான செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன், வை-ஃபை, ப்ளூடூத் v5, மைக்ரோ USB, GPS உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது. 4,500mAh அளவிலான பேட்டரி பொருத்தப்பட்டுள்ள இந்த 'விவோ S1' ஸ்மார்ட்போனில், இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது என்பது தனி சிறப்பு.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்