விவோ S1, சர்வதேசச் சந்தையில் அறிமுகமாகியுள்ளது. தனது சொந்த நாடான சீனாவில், விவோ நிறுவனம், S1 போனை அறிமுகம் செய்து 4 மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில், சர்வதேசச் சந்தைகளில் கால் பதிக்கிறது. அதே நேரத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட S1 போனுக்கும், சர்வதேசச் சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள S1 போனுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. குறிப்பாக பேட்டரி, ப்ராசஸர், டிஸ்ப்ளே சைஸ், கேமரா உள்ளிட்ட விஷயங்களில் மாறுபாடுகள் உள்ளன. இந்தோனேசியாவில் தற்போது விவோ S1, ப்ரி-ஆர்டர் புக்கிங்கில் இருக்கிறது.
விவோ S1 விலை:
இந்தோனேசியாவில் இந்திய விலைப்படி, 17,700 ரூபாய்க்கு ப்ரீ-ஆர்டர் செய்யப்படுகிறது S1. ஜூலை 23 ஆம் தேதி முதல் அங்கு விற்பனை செய்யப்பட உள்ளது S1.
விவோ S1 போனுடன், விவோ S1 ப்ரோ போனும் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலும், சர்வதேசச் சந்தையில் விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.
விவோ S1 சிறப்பம்சங்கள்:
விவோ S1 க்ளோபல் வேரியன்ட், ஃபன்-டச் ஓ.எஸ் 9 உடன், ஆண்ட்ராய்டு 9 பைய் கொண்டு இயங்குகிறது. டூயல் சிம் (நானோ) ஸ்லாட், 6.38 முழு எச்.டி+ சூப்பர் ஆமோலெட் திரை, வாட்டர்-டிராப் ஸ்டைல் நாட்ச், ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி65 எஸ்.ஓ.சி வசதிகளுடன், 4ஜிபி ரேம்-யும் இந்த போன் பெற்றுள்ளது.
3 பின்புற கேமராக்களைக் கொண்டுள்ள விவோ S1, 16 மெகா பிக்சல் கொண்ட முதன்மை கேமரா, 8 மெகா பிக்சல் கொண்ட இரண்டாவது மற்றும் 2 மெகா பிக்சல் கொண்ட மூன்றாவது கேமராக்களுடன் வருகிறது. 32 மெகா பிக்சல் திறன் கொண்ட செல்ஃபி கேமராவும் S1-ல் உள்ளது.
128 ஜிபி சேமிப்பு வசதியைப் பெற்றுள்ள இந்த போன், வை-ஃபை, ப்ளூடூத் வி5, யூஎஸ்பி ஓடிஜி, மைக்ரோ யூஎஸ்பி, ஜிபிஎஸ் உள்ளிட்ட வசதிகளை உள்ளடக்கியிருக்கிறது. கூடுதலாக, 4,500 எம்.ஏ.எச் பேட்டரி, இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட் சென்சார் அம்சங்களையும் S1 பெற்றுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்