விவோவின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்! 

விவோவின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்! 

Vivo Nex 3,க்ரேடியண்ட் ஃபினிஷுடன் மூன்று கலர் ஆப்ஷன்களில் வருகிறது

ஹைலைட்ஸ்
  • Vivo Nex 3S, 64 மெகாபிக்சல் பிரதான கேமராவைக் கொண்டுள்ளது
  • இது இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் பொருத்தப்பட்டு வருகிறது
  • Vivo Nex 3S 5G, 16 மெகாபிக்சல் பாப்-அப் செல்பி கேமராவைக் கொண்டுள்ளது
விளம்பரம்

விவோவின் புதிய ஸ்மார்ட்போனான Vivo Nex 3S 5G இறுதியாக அறிமுகமாகியுள்ளது. இது கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Vivo Nex 3-யின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். Vivo Nex 3S 5G அதன் முந்தைய வடிவமைப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.


Vivo Nex 3S 5G விலை:

Vivo Nex 3S 5G's 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட் CNY 4,998 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.50,000)-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதன் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் CNY 5,298 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.53,000) விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இது நீலம், கருப்பு மற்றும் ஆரஞ்சு ஆகிய மூன்று வண்ணங்களில் வருகிறது. மார்ச் 14 என்று சீனாவில் விற்பனை தொடங்கும், ஆனால் விவோவின் புதிய முதன்மை போனை இந்தியா உள்ளிட்ட பிற சந்தைகளில் வருவது குறித்து எந்த தகவலும் இல்லை.

nex body NEX

Vivo Nex 3S 5G அதன் முந்தைய வாட்டர்ஃபால் AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது

Vivo Nex 3S 5G விவரக்குறிப்புகள்:

டூயல்-சிம் (நானோ) Vivo Nex 3S 5G, Funtouch OS 10 உடன் Android 10-ல்இயக்குகிறது. போனின் முக்கிய அம்சம் அதன் 6.89-இன்ச் எச்டிஆர் 10 + முழு எச்டி + (1,080x2,256 பிக்சல்கள்) AMOLED வாட்டர்ஃபால் டிஸ்பிளே ஆகும். இந்த போன் ஆக்டா கோர் Qualcomm Snapdragon 865 SoC-யால் இயக்கப்படுகிறது, இது 12 ஜிபி LPDDR5 ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

Vivo Nex 3S 5G மூன்று பின்புற கேமரா அமைப்பு மற்றும் பாப்-அப் செல்பி கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது, அதனுடன் அதன் சொந்த எல்இடி ஃபிளாஷ் உள்ளது. கேமரா அமைப்பு, f/1.8 aperture உடன் 64 மெகாபிக்சல் பிரதான ஸ்னாப்பரைக் கொண்டுள்ளது. மேலும், இது 16 மெகாபிக்சல் புகைப்படங்களை வழங்க குவாட்-செல் பிக்சல் பின்னிங் செய்கிறது. இது 13 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் மற்றொரு 13 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ், 20x டிஜிட்டல் ஜூம் வரை ஆதரிக்கிறது. செல்ஃபிகள் மற்றும் வீடியோக்களுக்கு, f/2.0 aperture உடன் 16 மெகாபிக்சல் கேமராவைக் கொண்டுள்ளது. 

போனில் 256 ஜிபி வரை யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜ் உள்ளது. இதை மேலும் விரிவாக்க முடியாது. Vivo Nex 3S 5G, 44W அல்ட்ரா ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்திற்கான ஆதரவுடன் 4,500 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. இணைப்பு விருப்பங்களில் 5G, 4G LTE, Bluetooth 5.1, Wi-Fi a/b/g/n/ac, dual-frequency GPS, GLONASS மற்றும் Galileo ஆகியவை அடங்கும். ஆச்சரியம் என்னவென்றால், Vivo Nex 3S 5G 3.5mm headphone jack-ஐ வைத்திருக்கிறது. அங்கீகாரத்திற்காக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உள்ளது, அதே நேரத்தில் போனின் உள்ள சென்சார்களில் accelerometer, gyroscope, compass, proximity சென்சார் மற்றும் ambient light சென்சார் ஆகியவை அடங்கும்.

  • KEY SPECS
  • NEWS
Display 6.89-inch
Front Camera 16-megapixel
Rear Camera 64-megapixel + 13-megapixel + 13-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 4500mAh
OS Android Pie
Resolution 1080x2256 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vivo, Vivo Nex 3S 5G, Vivo Nex 3S 5G price, Vivo Nex 3S 5G specifications
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. iQOO Z10 Turbo, iQOO Z10 Turbo Pro செல்போனில் இத்தனை ரகசியம் இருக்காம்
  2. Huawei Band 9 வாட்ச் நீங்க நீச்சல் அடிச்சல் கூட இது கண்காணிக்குமாம்
  3. என்னங்க சொல்றீங்க 2 ஆண்டுகளுக்கு YouTube Premium தரும் ஜியோ
  4. சாம்சங் இப்படிப்பட்ட அம்சத்துடனா இந்த செல்போனை வெளியிடுது
  5. கொடுக்கும் காசுக்கு வொர்த்! Oppo Reno 13 5G, Reno 13 Pro 5G செல்போன்கள்
  6. POCO X7 5G செல்போன் ஆரம்பமே இப்படி அடித்து ஆடினால் எப்படிங்க
  7. கால் முடிகளை கொண்டு வாசனை நுகரும் சிலந்திகள்! புதிய தகவல்
  8. Amazon Great Republic Day sale 2025 இப்போ விட்டா ரொம்ப வருத்தப்படுவீங்க
  9. 10 ஆயிரம் ரூபாய் இருந்தால் 5G செல்போன் கிடைக்குமா? இதோ கிடைக்குமே!
  10. புலி வருது வருதுன்னு சொல்லி சொல்லி நிஜமாவே வந்துடுச்சு OnePlus 13R
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »