Tecno Camon 12 Air திங்களன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது Transsion Holdings பிராண்டிலிருந்து வரும் இந்தியாவின் சமீபத்திய ஸ்மார்ட்போன் ஆகும். Tecno Camon 12 Air-ன் சிறப்பம்சமாக hole-punch டிஸ்பிளேவை நிறுவனம் ‘Dot-in Display' என்று அழைக்கிறது.
இந்தியாவில் Tecno Camon 12 Air-ன் விலை:
இந்தியாவில் Tecno Camon 12 Air-ன் விலை ரூ. 9,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஆஃப்லைன் சில்லறை கடைகள் வழியாக கிடைக்கிறது. இந்த போன் Bay Blue மற்றும் Stellar Purple நிறங்களில் விற்பனை செய்யப்படும். அறிமுகம் குறித்து டிரான்ஸியன் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அரிஜீத் தலபத்ரா, Tecno Camon 12 Air தற்போது ஆஃப்லைன் தளத்தில் மிகவும் மலிவு விலையில், ‘Dot in-display'-வைக் கொண்டுவருவதற்கான திட்டத்தை வைத்திருக்கிறோம் என்று ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.
Tecno Camon 12 Air-ன் விவரக்குறிப்புகள்:
இரட்டை சிம் கொண்ட Tecno Camon 12 Air, Android 10 அடிப்படையிலான HiOS 5.5-யால் இயங்குகிறது. 6.55-inch HD+ (720x1600 pixels) டிஸ்பிளேவுடன் 20:9 aspect ratio, 90.3 percent screen-to-body ratio மற்றும் peak brightness of 500 nits போன்ற அம்சங்கள் உள்ளன. 4GB RAM உடன் இணைக்கப்பட்டு octa-core MediaTek Helio P22 SoC-யால் இயக்கப்படுகிறது.
Tecno Camon 12 Air-ல் triple rear கேமரா அமைப்பு உள்ளது. (f/1.8 aperture) உடன் 16-megapixel primary சென்சார், (2.5cm macro shots)-ற்கு 2-megapixel secondary சென்சார் மற்றும் மூன்றாவது கேமராவாக (120-degree wide-angle lens) உடன் 5-megapixel சென்சார் உள்ளது. மேலும், f/2.0 aperture மற்றும் 81-degree wide-angle lens உடன் 8-megapixel selfie கேமரா உள்ளது.
Tecno Camon 12 Air, 64 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (256 ஜிபி வரை) விரிவாக்கக்கூடியது. போனின் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v5.0 மற்றும் GPS/ A-GPS உள்ளது. accelerometer, ambient light sensor மற்றும் ஸ்மார்ட்போனை 0.27 வினாடிகளில் Unlock செய்ய ‘anti-oil' fingerprint சென்சார் ஆகிய சென்சார்கள் உள்ளன. இது Face Unlock அம்சத்தை ஆதரிக்கிறது.
இது 4,000mAh பேட்டரியில் இயங்குகிறது. இந்த போன் 12 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்க மதிப்பிடப்படுகிறது. Tecno Camon 12 Air164.29x76.3x8.15mm அளவையும் 172 கிராம் எடையும் கொண்டது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்