சோனி ஸ்மார்ட்போன்கள், ஒரு காலத்தில் இருந்ததைப் போல உலகளவில் பிரபலமாக இல்லை. ஆனால் நிறுவனம் ஜப்பானின் வீட்டுச் சந்தையில் இன்னும் ஒரு சிறந்த இடத்தைக் கொண்டுள்ளது. சோனியிலிருந்து சமீபத்திய வெளியீடு Xperia 8, ஒரு புதிய இடைப்பட்ட ஸ்மார்ட்போன் ஆகும். இது அக்டோபர் பிற்பகுதியில் ஜப்பானில் வெளியிடப்படும். இந்த சாதனம் Qualcomm Snapdragon 630 processor மூலம் இயக்கப்படுகிறது. இதன் விலை 54,000 Yen (தோராயமாக ரூ .35,900) ஆகும்.
விவரக்குறிப்புகள்
சோனி ஜப்பான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு மூலம் புதிய ஸ்மார்ட்போன் அறிவிக்கப்பட்டது. Snapdragon 630 தவிர, Sony Xperia 8-ல் 6-inch full-HD+ resolution screen உடன் 21:9 aspect ratio உள்ளது. சேதம் மற்றும் கீறல்களிலிருந்து பாதுகாப்பதற்காக முன்னும் பின்னும் Corning Gorilla Glass 6 உள்ளது. மேலும், தொலைபேசி ஒரு உலோகமாகும். இந்த சாதனம் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வருகிறது. மேலும் இது Android 9 Pie-ல் இயங்குகிறது.
தொலைபேசியின் வடிவமைப்பு மிகவும் தனித்துவமானது. தொலைபேசியின் அடிப்பகுதி வரை திரை நீண்டுள்ளது. திரைக்கு மேலே 8 மெகாபிக்சல் முன் கேமரா, earpiece மற்றும் sensor-கள் கொண்ட wide strip உள்ளது. சாம்பல், கருப்பு, ஆரஞ்சு மற்றும் நீலம் உள்ளிட்ட பல வண்ணங்களில் தொலைபேசி கிடைக்கும்.
IPX5/ 8 rating for water resistance மற்றும் IP6X rating for dust resistanceஐ இந்த சாதனம் கொண்டுள்ளது. Sony Xperia 8 இரட்டை கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது. இதில் 12 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா உள்ளது. தொலைபேசியில் 2,760mAh பேட்டரி உள்ளது மற்றும் சார்ஜிங் மற்றும் டேட்டா பரிமாற்றங்களுக்கு USB Type-C port பயன்படுகிறது. LTE connectivity மற்றும் VoLTE ஆகியவை சாதனத்திற்கு துணைபுரிகின்றன.
Sony Xperia 8 சலுகைக்கு மிகவும் விலை உயர்ந்தது, குறிப்பாக இந்தியாவில் இதேபோன்ற விலையுள்ள தொலைபேசிகள் விவரக்குறிப்புகள் மூலம் இன்னும் பலவற்றை வழங்குகின்றன. இருப்பினும், ஜப்பானில் அக்டோபர் பிற்பகுதியில் விற்பனைக்கு வரும்போது தொலைபேசி நன்றாக விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்