எலக்ட்ரானிக் சாதனங்கள் துறையில் முன்னணியில் இருந்து வரும் சோனி நிறுவனம் தனது ஹெட்ஃபோன் மற்றும் சவுண்ட் பார்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. அதன் விவரத்தை பார்க்கலாம்.
இசைப் பிரியர்கள் ஒவ்வொரு முறையும் புதிய ஹெட்ஃபோன் வரும்போதும் அதனை வாங்கி பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். என்னதான் சிறப்பு அம்சங்களை கொண்டதாக இருப்பினும், அதை விட பெட்டராக ஒன்று வராதா என்ற எதிர்பார்ப்பு அவர்கள் மனதில் எழுகிறது.
முன்பு வயர் இயர் போன்கள் நல்ல வரவேற்பில் இருந்தன. தற்போது அவை ப்ளூடூத் வயர்லெசுக்கு மாறி பல்வேறு அதிலும் தரமான அம்சங்களை கொண்ட சாதனங்கள் வெளி வருகின்றன. தற்போது சவுண்ட்பார் எனப்படும் ஸ்பீக்கர்கள் வரவேற்பை பெற்று வருகின்றன.
சவுண்ட் சிஸ்டத்தில் முன்னணியாக இருக்கு சோனி தற்போது அதிரடி ஆஃபர்களை அள்ளி விட்டுள்ளது. அதன் விவரம்-
சோனி WH-1000XM3 ஹெட்போன்கள் விலை ரூ. 5 ஆயிரம் வரையில் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது அதன் விலை ரூ. 24,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ShopatSC.com என்ற இணைய தளத்தில் இதனை வாங்கலாம். இது 30 மணி நேரம் சார்ஜ் தாங்கும்.
சோனி WH-H910N என்ற ஹெட்போன் விலை ரூ. 4 ஆயிரம் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது அதன் விலை ரூ. 18,891. இது 35 மணிநேரம் சார்ஜ் நீடிக்கும்
இதேபோன்று பட்ஜெட் ஹேட்போன்களின் விலையும் 40 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டிருக்கிறது.
SRS-XB402M, SRS-XB41, SRS-XB32, SRS-XB12 ஆகிய சவுண்ட் பார்களின் விலை ரூ. 8 ஆயிரம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று குறைக்கப்பட்ட மற்ற ஹெட்போன்கள் மற்றும் சவுண்ட் பார் ஸ்பீக்கர்களின் விலைப்பட்டியல் சோனியின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இசை பிரியர்கள், இந்த ஆஃபரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்