Photo Credit: WinFuture
கடந்த சில வாரங்களாக Samsung Galaxy Note 10 Lite-ன் கசிவுகள் அதிகரித்து வருகிறது. அடுத்த மாதம் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போனின் முழுமையான விவரக்குறிப்புகள் இப்போது வெளியேறிவிட்டன. Galaxy Note 10 Lite, in-house Exynos 9810 SoC-யில் இருந்து சக்தியைப் பெற முனைகிறது. இந்த போன் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்றும், அடுத்த ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி ஐரோப்பாவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
WinFuture-ன் அறிக்கைப்படி, Galaxy Note 10 Lite, hole-punch, pixel density of 398 ppi மற்றும் blue-light filter உடன் தட்டையான 6.7-inch full-HD+ (1080 x 2400 pixels) HDR AMOLED டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும். இந்த போன் One UI 2.0 உடன் Android 10-ல் இயங்கும் என்று கூறப்படுகிறது. மேலும், இது 2.7GHz வேகத்தில் Exynos 9810 SoC-யால் இயக்கப்படுகிறது. மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (512GB வரை) விரிவாக்கக்கூடிய 6GB RAM மற்றும் 128GB UFS ஸ்டோரேஜுடன் in-house SoC இணைக்கப்படும்.
Galaxy Note 10 Lite, f/2.2 lens உடன் 12-megapixel ultra-wide angle shooter மற்றும் 2x optical zoom ஆதரவுடன் 12-megapixel telephoto கேமரா ஆகியவை உதவியுடன், f/1.7 aperture மற்றும் dual pixel autofocus உடன் 12-megapixel பிரதான கேமராவை டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டதாகக் கூறப்படுகிறது. முன்பக்கத்தில், f/2.0 lens உடன் 32-megapixel செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. கேமரா அம்சங்களில் 60fps-ல் 4K video capture மற்றும் ultra-slow motion mode ஆகியவை அடங்கும்.
Galaxy Note 10 Lite, 25W Samsung ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கான ஆதரவுடன் 4,500mAh பேட்டரியை பேக் செய்வதாகக் கூறப்படுகிறது. ஆனால், இது வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவை இழக்கும். போனின் இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Bluetooth 5.0, NFC, dual-band Wi-Fi ac (2.4 + 5.0 GHz), a 3.5mm headphone jack, GPS, GLONASS, Beidu, Galileo மற்றும் Wi-Fi Direct ஆகியவை அடங்கும். மேலும், அங்கிகாரத்திற்காக in-display fingerprint சென்சார் உள்ளது. ஆன்போர்டு சென்சார்களில் accelerometer, barometer, compass, brightness sensor, proximity சென்சார் மற்றும் gyroscope ஆகியவை அடங்கும்.
சாம்சங்கின் வரவிருக்கும் Galaxy Note 10, EUR 609 (சுமார் ரூ. 48,000) விலையில் வழங்கப்படும் இருக்கும் என்றும் ஜனவரி 10 முதல் ஐரோப்பாவில் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. அறிமுகத்தைப் பொறுத்தவரை, Galaxy Note 10 Lite, இந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கப்படும் என்ற முந்தைய அறிக்கைகளுக்கு மாறாக, ஜனவரி மாதத்தில் அதிகாரப்பூர்வமாக செல்ல முனைகிறது. இருப்பினும், இந்தியா உள்ளிட்ட பிற சந்தைகளில் Galaxy Note 10 Lite கிடைப்பதில் எந்த வார்த்தையும் இல்லை.
Samsung Galaxy Note 10 Lite Price Leaked Ahead of Expected Launch This Month
Samsung Galaxy Note 10 Lite Renders Leaked, Colour Options Tipped
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்