இந்தியாவில் இன்று வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி எம் 31...! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 26 பிப்ரவரி 2020 14:28 IST
ஹைலைட்ஸ்
  • சாம்சங் கேலக்ஸி எம் 31 இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது
  • இந்த போன் 6,000 எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்யும்
  • மார்ச் முதல் வாரத்தில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சாம்சங் கேலக்ஸி எம் 31, பின்புறத்தில் எல் வடிவ குவாட்-கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது

சாம்சங் கேலக்ஸி எம் 31 இன்று மதியம் 1 மணிக்கு இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.  இந்த ஸ்மார்ட்போனை வாங்க தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான மூன்று முக்கிய காரணங்களை வெளிப்படுத்தியுள்ளது, இதில் சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே, 6,000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பின்புறத்தில் 64 மெகாபிக்சல் குவாட் கேமரா அமைப்பு ஆகியவை அடங்கும். 


இந்தியாவில் Samsung Galaxy M31-ன் விலை (எதிர்பார்க்கப்படுபவை):

சாம்சங் கேலக்ஸி எம் 31-ன அடிப்படை 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.15,999-ல் இருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஆன் போர்டு ஸ்டோரேஜுடனும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் மார்ச் முதல் வாரத்தில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Samsung Galaxy M31-க்கான வெளியீட்டு லைவ் ஸ்ட்ரீம் இன்று மதியம் 1 மணிக்கு தொடங்கும். சாம்சங்கின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இதை நீங்கள் நேரடியாக ஸ்ட்ரீம் செய்யலாம், மேலும் நாங்கள் லைவ் ஸ்ட்ரீமை கீழே வழங்குகிறது. இது தவிர, வெளியீட்டில் இருந்து நேரடி அப்டேட்டுகளை இங்கே காணலாம்.


Samsung Galaxy M31-ன் விவரக்குறிப்புகள் (எதிர்பார்க்கப்படுபவை):

Samsung கேலக்ஸி எம் 31, 6.4 இன்ச் முழு எச்டி + (1,080x2,340 பிக்சல்கள்) இன்ஃபினிட்டி-யு சூப்பர் அமோலேட் டிஸ்பிளே முன்பக்கத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி அல்லது 128 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜுடன் இணைந்து எக்ஸினோஸ் 9611 SoC-யால் இயக்கப்படும். கூடுதலாக, ஒரு பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512 ஜிபி வரை ஸ்டோரேஐ விரிவுபடுத்த முடியும்.

கேலக்ஸி எம் 31-ன் டீஸர்களைப் பார்ப்பதன் மூலம், 15W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 6,000 எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்யும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சாதனம் 159.2x75.1x8.9 மிமீ அளவு மற்றும் சுமார் 191 கிராம் எடையுள்ளதாக இருக்கும். இந்த போன் நீல மற்றும் கருப்பு வண்ண ஆப்ஷன்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேலக்ஸி எம் 31, பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்றும், முதன்மை கேமரா f/1.8 aperture கொண்ட 64 மெகாபிக்சல் ஷூட்டராக இருக்கும் என்றும் டீஸர்கள் தெரிவிக்கின்றன. மற்ற மூன்று கேமராக்களில் f/2.2 aperture கொண்ட 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, f/2.2 aperture கொண்ட 5 மெகாபிக்சல் டெப்த் கேமரா, மற்றும் f/2.4 aperture கொண்ட மற்றொரு 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தைப் பொறுத்தவரை, f/2.0 aperture கொண்ட 32 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கப்போகிறது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Crisp AMOLED display
  • Excellent battery life
  • Decent performance
  • Good photo quality in daylight
  • Bad
  • Disappointing low-light camera performance
  • Spammy notifications
  • Poor video stabilisation
 
KEY SPECS
Display 6.40-inch
Processor Samsung Exynos 9611
Front Camera 32-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 5-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 6000mAh
OS Android 10
Resolution 1080x2340 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Samsung, Samsung Galaxy M31, Samsung Galaxy M31 Specifications
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. கூகுள் பிக்சல் 11 கசிவு: சிறிய வடிவமைப்பு மாற்றங்களுடன் வெளியாகிறது - சிஏடி (CAD) ரெண்டர்கள் மூலம் தகவல்
  2. ஐபோன் 18 ப்ரோ: சிறிய அளவிலான 'டைனமிக் ஐலேண்ட்' வசதியுடன் வெளியாகலாம் - தகவல்
  3. விவோ பேட் 6 ப்ரோ அறிமுகம்: 13.2-இன்ச் 4K டிஸ்ப்ளே மற்றும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்!
  4. விவோ X300 அல்ட்ரா மற்றும் X300s அறிமுகம்: 200MP கேமரா, ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் மற்றும் பல சிறப்பம்சங்கள்!
  5. Oppo Find X9 Ultra உலகளாவிய அறிமுக தேதி உறுதி; Find X9s Pro கேமரா விவரங்கள் வெளியீடு
  6. Vi 5G விரிவாக்கம்: அடுத்த இரண்டு மாதங்களில் 90 நகரங்களுக்கு 5G சேவை வழங்கப்படும் என நிறுவனம் அறிவிப்பு
  7. ஆப்பிளின் ஏர் டிராப் (AirDrop) போன்ற புதிய வசதி: ஆண்ட்ராய்டு 17 மற்றும் One UI 9-ல் 'Tap to Share' அம்சம்களுடன்
  8. ஒன்பிளஸ் Ace 6 அல்ட்ரா ஏப்ரலில் அறிமுகமாக வாய்ப்பு: ரெட்மி K90 அல்ட்ராவுக்குப் போட்டியாக அமையுமா?
  9. விவோ X300s சிறப்பம்சங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி: 200MP கேமரா மற்றும் 7,100mAh பேட்டரியுடன் வெளியாகிறது
  10. இந்தியாவில் அறிமுகமாகிறது ஓப்போ Find X9 Ultra: பிஐஎஸ் (BIS) தரவுத்தளத்தில் இடம்பெற்றதால் எதிர்பார்ப்பு அதிகரிப்பு
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.