ரூ.5,499-ல் Samsung Galaxy M01 அறிமுகம்... சிறப்பம்சங்கள் என்ன..?

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 28 ஜூலை 2020 11:11 IST
ஹைலைட்ஸ்
  • Samsung Galaxy M01 Core will go on sale in India starting July 29
  • The phone comes with up to 32GB of onboard storage
  • Samsung Galaxy M01 Core is powered by a quad-core MediaTek 6739 SoC

கேலக்ஸி A01 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வேரியன்ட் போலவே கேலக்ஸி M01 உள்ளது

சாம்சங் தரப்பில் மிகக்குறைந்த விலையில் கேலக்ஸி M01 என்ற ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழு விவரங்களை இங்குப் பார்க்கலாம். 

சாம்சங் ஸ்மார்ட்போனிற்கு என்றே தனி வாடிக்கையாளர்கள் உண்டு. விலைக்கு ஏற்ப தரம், நீடித்து உழைக்கும் தன்மை போன்ற பண்புகளால் சாம்சங் பெயர் பெற்றது. ஆனால், ரெட்மி, ரியல்மி போன்ற ஸ்மார்ட்போன்களின் வருகைக்குப் பின்பு சாம்சங் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காக குறைந்த விலையில், அதிக சிறப்பம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யத் தொடங்கியது. 

அந்த வகையில், தற்போது மிகக்குறைந்த விலையில் சாம்சங் கேலக்ஸி M01 என்ற ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை வெறும் 5,499 ரூபாய் ஆகும். கேலக்ஸி M01 ஸ்மார்ட்போனில் கூகுளின் ஆண்ட்ராய்டு கோ இயங்குதளம், பின்பக்க கேமரா, 32 ஜிபி மெமரி வழங்கப்படுகின்றன.

1ஜிபி ரேம், 16ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி M01 வேரியன்டின் விலை ரூ.5,499 என்றும், 2ஜிபி ரேம், 32ஜிபி மெமரி கொண்ட வேரியன்டின் விலை ரூ.6,499 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கருப்பு, நீலம், சிவப்பு என மூன்று விதமான கலர்களில் வருகின்றது இந்த போன்.

நாளை (ஜூலை 29) முதல் சாம்சங் கேலக்ஸி M01 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. வாடிக்கையாளர்கள் இதனை சாம்சங் ஷோரூம், ரீடெயில் கடைகள், ஆன்லைன் ஷாப்பிங்கில் பெற்றுக் கொள்ளலாம். 

சுருக்கமான சிறப்பம்சங்கள்:
சிம்: டூயல் சிம்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு கோ
திரை: 5.3 இன்ச் TFT டிஸ்பிளே
பிராசசர்: குவாட் கோர் மீடியாடெக் 6739 SoC பிராசசர்
ரேம்: 1ஜிபி, 2ஜிபி 
கேமரா: 
8 மெகா பிக்சலுடன் பின்பக்க கேமரா, 
5 மெகா பிக்சலுடன் செல்ஃபி கேமரா
பேட்டரி சக்தி: 3,000 mAh


Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

 
KEY SPECS
Display 5.30-inch
Processor MediaTek MT6739
Front Camera 5-megapixel
Rear Camera 8-megapixel
RAM 1GB
Storage 16GB
Battery Capacity 3000mAh
OS Android Go Edition
Resolution 720x1480 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ₹90,000 போன் இப்போ ₹57,000-க்கு! Vivo X100 Pro மீது அமேசான் அதிரடி விலைக்குறைப்பு.. டீலை மிஸ் பண்ணிடாதீங்க
  2. இதுதான் சரியான நேரம்! Pixel 9 Pro Fold-க்கு அமேசான்ல ரூ. 52,000 தள்ளுபடி.. ஆஃபர் முடியறதுக்குள்ள அள்ளிக்கோங்க
  3. iPhone 17e வருது! பட்ஜெட் ஐபோன்ல இப்போ மேக்சேஃப் சப்போர்ட்.. சிங்கிள் கேமராவோட தரமான சம்பவம் பண்ணப்போற ஆப்பிள்
  4. சாம்சங், ஐபோனுக்கே டஃப் கொடுக்க ஷாவ்மி ரெடி! Xiaomi 17 Ultra-வோட குளோபல் ரெண்டர்ஸ் லீக்.. அந்த 200MP ஜூம் வேற லெவல்
  5. பிக்சல் 10ஏ-ல இவ்வளவு சூப்பர் கலர்ஸா? லீக்கான 4 மாஸ் கலர்கள் இதோ! பிப்ரவரி 18-க்காக வெயிட்டிங்
  6. கனவு விலையில் Vivo V50 5G! Flipkart-ல் மெகா டிஸ்கவுண்ட்.. 6000mAh பேட்டரி, Zeiss கேமரா இப்போ இவ்வளவு கம்மி விலையிலா?
  7. இனி பிளாக்ஷிப் போன் பட்ஜெட் விலையில்! Samsung Galaxy S24 FE இப்போ Amazon-ல் செம சீப்.. மிஸ் பண்ணிடாதீங்க
  8. ஸ்மார்ட்போன் ஹிஸ்டரிலயே இப்படி ஒரு பேட்டரியா? 7,400mAh உடன் மிரட்டும் iQOO 15 Ultra! கேமர்களுக்கு இதுதான் இனி ஒரே சாய்ஸ்
  9. பிக்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்! Google Pixel 10a எப்போ வருது தெரியுமா? டிசைன் மற்றும் கலர் டீசர் ரிலீஸ்
  10. விவோவோட அடுத்த தரமான போன் ரெடி! Geekbench-ல் மிரட்டும் Vivo V70 Elite.. பட்ஜெட்ல ஒரு பிளாக்ஷிப் போனா?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.