Samsung-இன் அல்ட்ரா-ஸ்லிம் போன் பிளான் ஃபெயிலா? Galaxy S26 Edge மாடல் நிறுத்தப்பட்டதன் பின்னணி

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 20 அக்டோபர் 2025 23:55 IST
ஹைலைட்ஸ்
  • Cancellation: Galaxy S26 Edge மாடல் கைவிடப்பட்டது
  • Lineup: Galaxy S26 வரிசையில் இனி மூன்று மாடல்கள் மட்டுமே இருக்கும்
  • Processor: S26 மற்றும் S26 Plus மாடல்கள் Exynos 2600 சிப்புடனும், Ultra ம

Samsung Galaxy S25 Edge, Galaxy chip-க்கான தனிப்பயன் Snapdragon 8 Elite-ல் இயங்குகிறது

Samsung ரசிகர்களுக்கு ஒரு முக்கியமான தகவல்! Galaxy S சீரிஸ்-ல வர்ற வருஷம் (2026) ஒரு பெரிய மாற்றம் இருக்கப் போகுதுன்னு இப்போ தகவல் வந்திருக்கு. சில மாசங்களுக்கு முன்னாடி, Samsung ரொம்ப மெலிசான ஒரு ஃபிளாக்ஷிப் போனை அறிமுகப்படுத்தியிருந்தாங்க. அதுதான் Samsung Galaxy S25 Edge. வெறும் 5.8mm தடிமன் கொண்ட இந்த போன், Apple-இன் iPhone Air-க்கு போட்டியா கொண்டு வரப்பட்டது. ஆனா, இப்போ வந்திருக்கிற தகவல்கள் அதிர்ச்சி கொடுக்கிற மாதிரி இருக்கு.

Galaxy S26 Edge மாடல் ரத்து

அடுத்த வருஷம் வரப்போகிற Samsung Galaxy S26 Edge மாடல் கைவிடப்பட்டுவிட்டது! சவுத் கொரியன் மீடியாக்கள் வெளியிட்டிருக்கிற தகவல் படி, Galaxy S25 Edge மாடலின் விற்பனை ரொம்பவும் மோசமா இருந்ததால, Samsung இந்த அல்ட்ரா-ஸ்லிம் போன் சீரிஸை நிரந்தரமா நிறுத்திட்டாங்க.எப்படி இவ்வளவு பெரிய முடிவு எடுத்தாங்கன்னு பார்த்தா, S25 Edge-ஓட விற்பனை வெறும் 1.31 மில்லியன் யூனிட்கள் மட்டும்தான் விற்றிருக்கு. ஆனா, மற்ற மாடல்கள் (S25, S25 Plus, S25 Ultra) எல்லாம் பன்மடங்கு அதிகமா விற்றிருக்கு. மெலிசான போன் வேணும்னு கஸ்டமர்கள் ஆசைப்பட்டாலும், குறைவான பேட்டரி பவர் (3,900mAh) மற்றும் டெலிஃபோட்டோ கேமரா இல்லாதது போன்ற முக்கியமான அம்சங்களை இழக்க அவங்க தயாராக இல்லைன்னு இப்போ தெரிய வந்திருக்கு.

மீண்டும் வருகிறது Galaxy S26 Plus

இந்த முடிவுனால, போன வருஷம் நிறுத்தப்படலாம்னு பேசப்பட்ட Galaxy S26 Plus மாடல் இப்போ மீண்டும் உயிர் பெற்றுள்ளது! 2026-ல வரப்போகும் Galaxy S சீரிஸ் இனி வழக்கம்போல மூன்று மாடல்களை மட்டுமே கொண்டிருக்கும்.

  • Galaxy S26 (அல்லது S26 Pro): இதுதான் பேஸ் மாடல்.
  • Galaxy S26 Plus: பெரிய ஸ்கிரீன் மற்றும் பேட்டரி கொண்டது.
  • Galaxy S26 Ultra: டாப்-எண்ட் மாடல்.

பிராசஸர் மற்றும் எதிர்பார்ப்புகள்:

பேஸ் மற்றும் பிளஸ் மாடல்கள்ல Samsung-இன் Exynos 2600 சிப் இருக்கலாம். ஆனா Galaxy S26 Ultra மாடல்ல மட்டும் வழக்கம் போல Qualcomm-இன் Snapdragon 8 Elite Gen 5 சிப் வர வாய்ப்பு இருக்கு. Galaxy S25 Edge-இன் டெவலப்மென்ட் முடிஞ்சிருந்தாலும், அதை இப்போதைக்கு வெளியிடப் போறதில்லைன்னு Samsung ஊழியர்களிடம் சொல்லியிருக்காங்க. அல்ட்ரா-ஸ்லிம் போன் ட்ரெண்ட் இப்போதைக்கு முடிவுக்கு வந்துருச்சுன்னு Samsung நம்புறாங்க. மொத்தத்துல, அடுத்த வருஷம் Samsung-இன் ஃபிளாக்ஷிப் மாடல்கள் அதிக சிறப்பம்சங்கள், பெரிய பேட்டரி மற்றும் கன்ஃபார்மான டிசைனோட வரும்னு நம்பலாம்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ChatGPT-இல் Chats-ஐ Delete மற்றும் Archive செய்வது எப்படி? – படிப்படியாக நீக்கும் முறைகள் இங்கே
  2. Realme 16T 5G, P4R 5G இந்தியாவில் விரைவில் அறிமுகம் – நிறங்கள், ஸ்டோரேஜ் தகவல் வெளியீடு
  3. இந்த வாரத்தின் சிறந்த OTT வெளியீடுகள் (மார்ச் 9 - மார்ச் 15): என்னென்ன படங்கள்ன்னு பாருங்கள்
  4. Samsung Galaxy M17e 5G இந்திய விலை லீக் – மார்ச் 17 அறிமுகத்திற்கு முன் தகவல்
  5. Motorola அறிமுகப்படுத்திய Motorola Edge 70 Fusion+ – Triple Camera, 5,200mAh பேட்டரி
  6. iPhone Fold-ல் iPad போன்ற UI, Split-Screen Apps ஆதரவு வரலாம்
  7. James Webb Space Telescope-ன் புதிய கண்டுபிடிப்பு: Jupiter ஆரோராவில் Io, Ganymede தடயங்கள்
  8. Meta Platforms மோசடி தடுப்பு கருவிகளை விரிவுபடுத்துகிறது – WhatsApp-ல் புதிய Device Link எச்சரிக்கை
  9. Xiaomi 17 Ultra இந்தியாவில் அறிமுகம் – 200 மெகாபிக்சல் Leica கேமரா, தொடர்ச்சியான Optical Zoom: விலை மற்றும் அம்சங்கள்
  10. Vivo Y51 Pro 5G இந்தியாவில் அறிமுகம் – 7,200mAh பேட்டரி, 50 மெகாபிக்சல் கேமரா: விலை மற்றும் விவரங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.