மார்ச் 6-ல் சாம்சங் கேலக்ஸி S20 சீரிஸ் விற்பனை - அமெரிக்க இணையதளம்!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 31 ஜனவரி 2020 12:59 IST
ஹைலைட்ஸ்
  • Samsung Galaxy S20 சீரிஸ், Exynos 990 SoC-யால் இயக்கப்படுகிறது
  • மார்ச் 6-ல் டெலிவரி செய்யப்படுவதாக அமெரிக்க வலைத்தளம் தெரிவித்துள்ளது
  • கேலக்ஸி நிகழ்வு பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெறும்

Samsung Galaxy S20 சீரிஸின் முன்பதிவு பக்கம், விருப்பமான கேரியரைக் கேட்கிறது

சாம்சங் கேலக்ஸி நிகழ்வு பிப்ரவரி 11-ஆம் தேதிக்கு நடைபெற உள்ளது. மேலும், நிறுவனம் Galaxy S20 சீரிஸையும், Galaxy Z Flip எனப்படும் இரண்டாவது மடிக்கக்கூடிய போனையும் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த கேலக்ஸி சாதனத்திற்கான முன்பதிவுகள் இப்போது நடைபெற்று வருகின்றன. மேலும், நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ தளத்தில் ஆர்முள்ள பதிவுகளை எடுத்து வருகிறது. இவை முன்கூட்டிய ஆர்டர்கள் அல்ல. ஆனால், கேலக்ஸி போன் எப்போது கிடைக்கும் என்பதற்கான அறிவிப்புகளுக்கான பதிவுகள் ஆகும். இந்த முன்பதிவு பக்கம் வதந்தியான Galaxy S20 சீரிஸின் அனுப்பப்படும் தேதியை வெளிப்படுத்துகிறது.

சாம்சங் அமெரிக்க தளத்தில் (Samsung US site), அடுத்த கேலக்ஸி சாதனம் மார்ச் 6-ஆம் தேதி வழங்கப்படும் என்பதை முன்பதிவு பக்கம் வெளிப்படுத்துகிறது. இதன் பொருள் Galaxy S20 சீரிஸின் வெளியீட்டு தேதி மார்ச் 6 ஆகும். மேலும், அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே, பிப்ரவரி 11-ஆம் தேதி (on February 11) முன்கூட்டிய ஆர்டர்கள் தொடங்கப்பட வேண்டும். முன்பதிவு பக்கம் தனிப்பட்ட விவரங்கள், விருப்பமான கேரியர் ஆகியவற்றைக் கேட்கிறது. பின்னர் மார்ச் 6-ஆம் தேதியைக் காண்பிக்கும் உறுதிப்படுத்தல் பக்கத்தைக் காட்டுகிறது. அதில், “மார்ச் 6-ஆம் தேதி உங்கள் கேலக்ஸி முன்கூட்டிய ஆர்டரை முடிக்க மின்னஞ்சலைத் தேடுங்கள்.” இந்த செய்தி அமெரிக்க இணையதளத்தில் மட்டுமே காண்பிக்கப்படுகிறது. மேலும், இந்திய தளம் டெலிவரி தேதியைக் குறிப்பிடவில்லை. டெலிவரி தேதி வெவ்வேறு பிராந்தியங்களில் வேறுபட்டிருக்கலாம். இந்த விற்பனை தேதியை XDA's Max Weinbach-ல் முன்னதாகவே தோன்றியுள்ளது.

Samsung Galaxy S சீரிஸ் ஃபிளாக்ஷிப்பின் மூன்று வெரியண்டுகள் இந்த நேரத்தில் நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது - Samsung Galaxy S20, Samsung Galaxy S20+ மற்றும் Samsung Galaxy S20 Ultra. இந்த ப்ரீமியம் வேரியண்வ், குவாட் ரியர் கேமராக்கள், 100x டிஜிட்டல் ஜூம் மற்றும் 5,000mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Galaxy S20 சீரிஸின் விலை EUR 899 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 70,900)-ல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மிகவும் விலையுயர்ந்த Galaxy S20 Ultra-வின் விலை EUR 1,549 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1,22,000)-யாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ரெட்மி டர்போ 5 இந்திய அறிமுக தேதி கசிந்தது; ரெட்மி 17 5G போனுடன் வரக்கூடும்
  2. ஒப்போ ஃபைண்ட் X9 அல்ட்ரா மற்றும் X9s இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன
  3. மே 29 அறிமுகத்திற்கு முன்னதாக விவோ தனது முதல் ஓவர்-இயர் ANC ஹெட்போன்களை டீஸ் செய்துள்ளது
  4. ரியல்மி P4s 5G இந்தியாவின் அறிமுக காலக்கெடு, சேமிப்பு மாறுபாடுகள் மற்றும் வண்ண விருப்பங்களுடன் கசிந்தது
  5. ரியல்மி 16டி 5ஜி vs ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 5ஜி vs மோட்டோரோலா எட்ஜ் 70 :இந்திய விலை, விவரக்குறிப்புகள் ஒப்பீடு
  6. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி Z Fold 5, Z Flip 5 போன்களுக்கு ஒன் யுஐ 8.5 ஸ்டேபிள் அப்டேட் கிடைத்துள்ளதாகத் தகவல்
  7. ஒப்போ ஏ6சி 7,000mAh பேட்டரி, 13-மெகாபிக்சல் பின்புற கேமராவுடன் இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள்
  8. ரெட்மி நோட் 15 5ஜி, ரெட்மி 15 5ஜி போன்களின் விலை இந்தியாவில் உயர்ந்துள்ளதாக தகவல்
  9. ஒப்போ ஏ6சி (Oppo A6c) இந்திய விலை, மெமரி கட்டமைப்புகள் எதிர்பார்க்கப்படும் அறிமுகத்திற்கு முன்னதாக கசிந்தன
  10. மோட்டோ G37, G37 பவர், பட்ஸ் 2 இந்தியாவில் விற்பனைக்கு வந்தன: விலை, சலுகைகள் விவரம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.