எக்ஸினோஸ் 1480 சிப்செட்.. 120Hz சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே! சாம்சங் M56 5G இப்போ செம மலிவு

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 23 டிசம்பர் 2025 19:01 IST
ஹைலைட்ஸ்
  • ரூ.27,999-க்கு அறிமுகமான 8GB/128GB மாடல் தற்போது ரூ.21,208-க்கு விற்பனை.
  • SBI மற்றும் Axis வங்கி கார்டுகள் மூலம் கூடுதலாக ரூ.4,000 வரை தள்ளுபடி.
  • 6 ஆண்டுகளுக்கான ஆண்ட்ராய்டு ஓஎஸ் (OS) மற்றும் செக்யூரிட்டி அப்டேட் உறுதி.

Samsung Galaxy M56 இப்போது ரூ.21,204க்கு கிடைக்கிறது.

Photo Credit: Samsung

2025-ஆம் ஆண்டின் இறுதியில் சாம்சங் நிறுவனம் தனது பட்ஜெட் மற்றும் நடுத்தர ரக போன்கள் மீது அதிரடி ஆஃபர்களை வாரி வழங்கி வருகிறது. அந்த வகையில், கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகமான Samsung Galaxy M56 5G மொபைலின் விலை தற்போது பிளிப்கார்ட் தளத்தில் கிடுகிடுவென குறைந்துள்ளது. இந்த போன் லான்ச் ஆன போது 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ₹27,999 ஆக இருந்தது. ஆனால், தற்போது பிளிப்கார்ட்டில் இது ₹21,208-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதாவது எந்தவித நிபந்தனையும் இன்றி நேரடியாக ₹6,791 தள்ளுபடி கிடைக்கிறது. இதுமட்டுமல்லாமல், உங்களிடம் SBI அல்லது Axis வங்கி கிரெடிட் கார்டு இருந்தால், கூடுதலாக ₹4,000 வரை தள்ளுபடி பெற்று, இந்த போனை நீங்கள் சுமார் ₹17,000 முதல் ₹18,000 விலையிலேயே வாங்கிட முடியும்.

இந்த போனில் அப்படி என்ன ஸ்பெஷல்? இது சாம்சங் M-சீரிஸிலேயே மிகவும் மெலிதான (7.2mm) மற்றும் உறுதியான போன் ஆகும். இதன் முன்னும் பின்னும் Corning Gorilla Glass Victus+ பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 6.7-இன்ச் Full HD+ Super AMOLED+ டிஸ்ப்ளே மற்றும் 120Hz ரிப்ரெஷ் ரேட் இருப்பதால், வீடியோ பார்க்கும் அனுபவம் தியேட்டர் போல இருக்கும்.

பெர்பார்மன்ஸை பொறுத்தவரை

இதில் சாம்சங்கின் சொந்த Exynos 1480 (4nm) சிப்செட் மற்றும் AMD Xclipse 530 GPU உள்ளது. கேமிங் மற்றும் அன்றாட வேலைகளுக்கு இது மிகச்சிறப்பாக ஈடுகொடுக்கும். கேமராவில் 50MP மெயின் கேமரா (OIS வசதியுடன்), 8MP அல்ட்ராவைடு மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ் என ட்ரிபிள் கேமரா செட்டப் உள்ளது. செல்ஃபிக்காக 12MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

5,000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் இந்த போனுக்கு 6 வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட்கள் வழங்கப்படும் என சாம்சங் உறுதி அளித்துள்ளது. அதாவது 2031-ஆம் ஆண்டு வரை உங்கள் போன் லேட்டஸ்ட் சாப்ட்வேரில் இயங்கும். பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்ய நினைப்பவர்களுக்கு ரூ.17,250 வரை தள்ளுபடி கிடைக்க வாய்ப்புள்ளது.கேமராவில் 50MP மெயின் கேமரா (OIS வசதியுடன்), 8MP அல்ட்ராவைடு மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ் என ட்ரிபிள் கேமரா செட்டப் உள்ளது. செல்ஃபிக்காக 12MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஜான் டெர்னஸ் தலைமையில் ஆப்பிளின் ஃபோல்டபிள் ஐபேட், AI சாதனங்கள் மற்றும் டச்ஸ்கிரீன் மேக்புக் அறிமுகத் திட்டம்
  2. விவோ X500 ப்ரோ மேக்ஸ்: 200MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ மற்றும் 50MP LOFIC கேமராவுடன் அறிமுகமாக வாய்ப்பு
  3. அறிமுகத்திற்கு முன் கீக்பெஞ்சில் ஷாவோமி 17T: டைமென்சிட்டி 8500 சிப் மற்றும் 12GB RAM விவரங்கள் கசிந்தன
  4. விவோ X போல்ட் 6-ல் 200MP கேமரா மற்றும் பெரிய பேட்டரி; ஷாவோமி மிக்ஸ் போல்ட் 6 வெளியீட்டுத் தகவல் கசிந்தது
  5. போக்கோ C81x 4G vs லாவா போல்ட் N2 ப்ரோ vs ஐடெல் ஜீனோ 100: இந்தியாவில் விலை மற்றும் சிறப்பம்சங்கள் ஒப்பீடு
  6. உங்கள் ஆண்ட்ராய்டு போனில் அட்வான்ஸ்டு ப்ரொடெக்ஷனை எவ்வாறு இயக்குவது: ஒரு படிப்படியான வழிகாட்டி
  7. ரெட்மி A7 ப்ரோ 4G vs விவோ Y05 4G vs ரியல்மி P4 லைட் 4G: இந்தியாவில் விலை மற்றும் சிறப்பம்சங்கள் முழு ஒப்பீடு
  8. உங்கள் சாம்சங் போன் சீராக இயங்க அதனைத் தானாகவே மறுதொடக்கம் (Restart) செய்வது எப்படி?
  9. ஆண்ட்ராய்டின் நோட்டிஃபிகேஷன் பபிள்ஸ் அம்சத்திற்கான ஆதரவை வழங்கும் பணியில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளது
  10. ஜியோ யூத் அண்ட் கேமிங் பிளான்: ஸ்னாப்சாட்+, ஃபேன்-கோடு மற்றும் ஜெமினி ப்ரோ அறிமுகம்: விலை, நன்மைகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.